டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் 2- 3 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. முதலீட்டுத் திட்டம், தொழிற்சாலை இடங்கள் அமைக்கப்படும் இடம், டெஸ்லா குழு இந்தியாவுக்கு வருவது என அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே உள்ளது.
டெஸ்லா-வின் முதல் விருப்பத் தேர்வாக இருப்பது 3 மாநிலங்கள் என்றும் இது மேற்கிந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத், தென்னிந்தியாவில் தமிழ்நாடு ஆகியவை தான் என்றும், அமெரிக்காவில் இருந்து வரும் குழு முதல் கட்டமாக இந்த 3 மாநிலங்களிலும் இடத்தை தேடவும், மாநில அரசுடன் சலுகைகள் குறித்துப் பேசவும் உள்ளதாகத் தெரிகிறது.

டெஸ்லா-வை கவரும் வகையில் தமிழ்நாட்டில் என்னவெல்லாம் இருக்கிறது என டிவிட்டரில் ஒரு பதிவு டிரெண்டாகி வருகிறது. இதில் முதலும் முக்கியமான விஷயம் சென்னையில் மணலூர் சிப்காட். இங்கு EV பார்க் + எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி பூங்கா இரண்டும் ஒரு சேர அமைந்துள்ளது. இந்த இரண்டு பிரத்யேக சிப்காட் பூங்காக்கள் 706 ஏக்கர் + 534 ஏக்கர் என 1240 ஏக்கர் பரப்பளவில் 2 கிமீ இடைவெளியில் அமைந்துள்ளது.
இந்த பகுதி டெஸ்லாவின் கார் உற்பத்திக்கு மட்டும் அல்லாமல் அதன் உதிரி பாகங்கள் தயாரிப்புக்கும் பெரிய அளவில் பயன்படும். சரி டெஸ்லா இந்தியாவில் அமைக்கும் தொழிற்சாலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி சார்ந்து இருக்கப்போகிறது என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விஷயம்.
இதற்கு ஏற்றார் போல் மணலூர் சிப்காட்-க்கு அருகில் எண்ணூர் (57 கிமீ), சென்னை (61 கிமீ) மற்றும் காட்டுப்பள்ளி (63 கிமீ) ஆகிய மூன்று உலகத் தரம் வாய்ந்த துறைமுகங்கள் உள்ளது. இவற்றில் இரண்டு பிரத்தியேகமான ரோ-ரோ ஆட்டோமொபைல் டெர்மினல் இந்தியாவிலேயே மிகப்பெரியது. ரோ-ரோ ஆட்டோமொபைல் டெர்மினல் என்று கார்கள் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான சிறப்பு பகுதியாகும்.
தமிழ்நாடு அரசு பெரும் முதலீட்டு திட்டத்துடன் வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிலத்துடன் மலிவான மற்றும் 24 மணிநேர மின்சாரம் வழங்குகிறது. டெஸ்லா-வின் 2-3 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்க்க கூடுதலான சலுகை வழங்கவும் வாய்ப்பு உள்ளது.
இதேபோல் சென்னையின் புதிய உப்புநீக்கும் ஆலைகள் desalination திட்டங்கள் உருவாக்கப்பட உள்ள நிலையில், எதிர்கால நீர் தேவைக்காக கடலுக்கு அருகாமையில் அமைக்கப்படலாம். இதுவும் டெஸ்லாவுக்கு நீண்ட கால ஆதாரத்தை கொடுக்கும்.
இந்தியாவின் சிறந்த திறமையான ஊழியர்கள் பட்டாளத்தை தமிழ்நாடு கொண்டு உள்ளது. அதிலும் குறிப்பாக பொறியியல் & தொழிற்சாலைகளில் 43% பெண் பணியாளர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளனர். மேலும் தமிழ்நாடு நாட்டிலேயே சிறந்த ஆட்டோமொபைல் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் EV பிரிவில் முன்னணியில் உள்ளது.
மேலும் டெஸ்லாவின் இதர உதிரிபாக பொருட்கள் சப்ளை செயின், கார் போக்குவரத்து என அனைத்திற்கும் ஏற்றார் போல் வரவிருக்கும் 6 லேன் சித்தூர் தச்சூர் இவே & சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு அருகாமையில் இருக்கிறது இந்த மணலூர் சிப்காட்.
2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் EV பாலிசி நாட்டிலேயே மிகச் சிறந்ததாகும். இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிர்வாகம் கட்டாயம் வேறு இடத்திற்கு செல்லாது.
மத்திய அரசு கடந்த மாதம், வெளிநாட்டு எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் இத்துறையின் அதிநவீன தொழில்நுட்பத்தை ஈர்க்க புதிய EV பாலிசியை கொண்டு வந்தது. இந்த கொள்கை மூலம் குறைந்தது 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து, மூன்று ஆண்டுகளுக்குள் உற்பத்தியைத் தொடங்கினால், குறிப்பிட்ட மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரி விகிதத்தைக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எலான் மஸ்க் நீண்ட காலமாகக் கேட்டு வந்த வரி குறைப்பு கிடைத்தது. புதிய கொள்கையின் கீழ், முதலீடு செய்யும் நிறுவனங்கள் குறைந்த வரி விகிதத்தில் ஆண்டுக்கு 8,000 வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.
More From GoodReturns

CEOக்களுக்கு சம்பளத்தை அள்ளி கொடுத்து ஊழியர்களுக்கு கிள்ளி கொடுக்கும் நிறுவனங்கள்!! இதெல்லா நியாயமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications