தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மிகப்பெரிய அதிரடி நடவடிக்கை இன்று எடுத்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்களுக்கு அளிக்கப்படும் நல திட்ட உதவிகள் தடைபட கூடாது என்பதற்காக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ரூ.1,000 × 3 = ரூ.3,000 முன்பணமாகவும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2,000 உட்பட மொத்தம் ரூ.5,000 இன்று காலை 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
1.31 கோடி மக்களுக்கு 5000 ரூபாய் மொத்தம் ரூ.6,550 கோடி பெண்களின் கைகளுக்கு சென்றுள்ளது. இந்த தொகை ஒரு வளர்ச்சி திட்டத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட துறைக்கோ செல்வது இல்லை. மொத்தமாக மக்கள் கைகளுக்கு செல்கிறது என்பதால் இது தமிழ்நாட்டு பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது மாதமாதம் அளிக்கப்படும் 1310 கோடி ரூபாய் விட 5 மடங்கு அதிகம்.

தமிழ்நாடு பட்ஜெட்டில் 1.49%
2025-2026 நிதியாண்டு தமிழ்நாடு பட்ஜெட் மொத்த செலவு ரூ.4,39,293 கோடியாக உள்ளது. இதில் இந்த ரூ.6,550 கோடி என்பது 1.49% ஆகும். இது மிகப்பெரிய அளவிலான நேரடி பணப்புழக்கத்தை (liquidity injection) தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு இது பெரும் உதவியாக அமைந்துள்ளது.
பெண்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களின் சம்பளமில்லா உழைப்பை அங்கீகரித்து நிதி சுதந்திரத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. கிராமப்புற பெண்களில் 79% பேர் இந்த பணத்தை சிறந்த தரமான அரிசி, காய்கறிகள் வாங்குவதற்கு பயன்படுத்துகின்றனர். இதனால் குடும்ப உணவின் தரம், ஆரோக்கயம் உயர்ந்துள்ளது. நகர்ப்புற பெண்களில் 55% பேர் இதேபோல் வாழ்வை மேம்படுத்துவதற்கு செலவுகளை செய்கின்றனர்.
மேலும் 35-39% பெண்கள் மருந்துகள் வாங்க பயன்படுத்துகின்றனர். 20% பேர் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு (புத்தகம், கட்டணம், பொருட்கள்) பயன்படுத்துகின்றனர். 50%க்கும் மேற்பட்ட பெண்கள் இதற்கு முன் கடைக்காரர்கள் அல்லது கடன் கொடுப்பவர்களிடம் அதிக வட்டியில் கடன் வாங்கும் நிலை மாறியுள்ளது.
இதில் மிக முக்கியமாக 95% பெண்கள் இப்போது கணவரின் அனுமதியின்றி செலவு செய்ய முடிகிறது என்று கூறுகின்றனர். இது வீட்டுக்குள் முடிவெடுக்கும் அதிகாரத்தை பெண்களுக்கு கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை, காரணம் இத்தொகை பெண்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செல்கிறது.
பொருளாதாரத்தில் பெரும் தாக்கம்
ரூ.6,550 கோடி நேரடியாக 1.31 கோடி பெண்களின் கைகளுக்கு செல்வது "நுகர்வு அலை" (consumption ripple effect) உருவாக்குகிறது. ஏழை குடும்பங்கள் பணத்தை உடனடியாக உள்ளூர் கடைகளில் (காய்கறி, துணி, சேவைகள்) செலவிடுகின்றனர். இதனால் பணம் கிராம மற்றும் சிறு நகரங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
எப்போதும் மக்கள் கையில் ஒரு ரூபாய் கொடுக்கப்பட்டால் அது ஒரு ரூபாய்க்கும் அதிகமான பொருளாதார செயல்பாட்டை உருவாக்குகிறது. கடைக்காரர், மொத்த வியாபாரி, விவசாயி என அனைத்து பிரிவுகளிலும் இதன் தாக்கம் இருக்கும்.
பல லட்சம் பெண்கள் முதல் முறையாக வங்கி கணக்கு வைத்து, ATM, e-Sevai மையங்கள், மொபைல் பேங்கிங் ஆகியவற்றை பயன்படுத்த கற்றுக்கொண்டுள்ளனர். இது நிதி அறிவை (financial literacy) அதிகரித்துள்ளது. இந்த மகளீர் உரிமை தொகை மூலம் மக்களின் அடிப்படை செலவுகளை ஈடு செய்யும் காரணத்தால், பெண்கள் வீட்டுத் தொழில் (தையல், டீ கடை) தொடங்கவோ, புதிய வேலை தேடவோ, படிக்கவோ பயப்படாமல் முயற்சிக்கின்றனர்.
தமிழ்நாட்டு கிராமங்களுக்கு நேரடி உதவி
இந்த திட்டம் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்காக உருவாக்கப்பட்டது என்பதால் தமிழ்நாட்டின் கிராமங்களில் வறுமை ஒழிக்கும், உணவு பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், கடன் சுமை குறைப்பு ஆகியவற்றுக்கு இது நேரடி உதவியாக உள்ளது. சென்னை அருகே உள்ள கிராமங்கள் முதல் திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள பெண்கள் இந்த ரூ.5,000-ஐ பெரும் நம்பிக்கையுடன் பெற்றுள்ளனர். இது அவர்களின் சுயமரியாதை மற்றும் குடும்ப முடிவெடுக்கும் அதிகாரத்தை பெரிதும் உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

பாஜக அரசின் தவறான முடிவுகளே LPG சிலிண்டர் பற்றாக்குறைக்கு காரணம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி..!

உங்க வீட்டுல கல்யாண ஏற்பாடு நடக்குதா?ரூ.10,000 போதும் கடற்கரையில டும் டும் டும் முடிக்கலாம் தெரியுமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!



Click it and Unblock the Notifications