தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளதோ அவர்கள் மட்டும்தான் எதிர் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும்.
இதன்படி தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 ஆகவும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 7,617 ஆகவும் உள்ளது. இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் இருக்கிறது. இங்கே மொத்தம் 31.57 லட்சம் .வாக்காளர்கள் இருக்கிறார்கள் இவர்களில் 16.12 லட்சம் பேர் பெண்கள்.

திருவள்ளூருக்கு அடுத்ததாக அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக இருப்பது சென்னை. இங்கே 28.30 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் இவர்களில் 14.64 லட்சம் பேர் பெண்கள். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மதுரை, கடலூர், திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 20 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில் பார்க்கும்போது இந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சியினர் இனி பெண் வாக்காளர்களை குறி வைத்து தான் தங்களுடைய அடுத்த கட்ட நகர்வுகளை எடுத்து வைப்பார்கள். ஏற்கனவே திமுக, பெண் வாக்காளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் சுமார் 1.30 கோடி பேருக்கு 5000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வங்கி கணக்கிலேயே வரவு வைத்துவிட்டது. இது மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக பெண்களுக்கு அமைந்தது.

பிப்ரவரி ,மார்ச் , ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடைகால சிறப்பு தொகையாக 2000 ரூபாய் என மொத்தம் 5000 ரூபாய் பெண்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. முன்கூட்டியே அறிவித்தால் எதிர்கட்சிகள் வழக்கு போட நேரிடலாம் என்பதால் தமிழ்நாடு அரசு வங்கி கணக்கில் பணத்தை வரவு வைத்துவிட்டு தான் அறிவிப்பை வெளியிட்டது . அந்த வகையில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் மனதில் திமுக இடம் பிடித்து விட்டது.

இந்த 5000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பணமும் பொங்கல் பண்டிகைக்காக கொடுத்த பணமும் 3000 ரூபாய் திமுகவுக்கு இந்த முறை கணிசமான அளவு பெண் வாக்குகளை ஈர்ப்பதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேலையில் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமை தொகையை ஆயிரம் ரூபாயாக இருந்து 2000 ரூபாயாக உயர்த்தப் போவதாக முதலமைச்சர் ஸ்டாலினே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க அதிமுக தாங்கள் ஆட்சிக்கு வரும்போது குலவிளக்கு என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு பெண்களுக்கு 2000 ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவைக்கப்படும் என அறிவித்திருக்கிறது. தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை தான் அதிகமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.
எனவே திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் பெண் வாக்காளர்களை குறி வைத்து பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிடப் போகின்றன. குறிப்பாக மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் வர இருப்பதால் அன்றைய நாளில் பெண் வாக்காளர்களுக்கு பெரிய ஜாக்பாட் அறிவிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பெண்கள் சுய உதவிகுழு கடன்கள் தள்ளுபடி, பெண்களுக்கு தொழில் தொடங்க சிறப்பு நிதி என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.
சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பார்க்கும் போதும் கிட்டத்தட்ட 200 தொகுதிகளுக்கும் மேல் பெண் வாக்காளர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். எனவே இந்த தேர்தலில் வெற்றி கணக்கை மாற்றப் போவது பெண் வாக்காளர்கள் தான் என்பது உறுதியாகிவிட்டது. யார் ஆட்சி அமைத்தாலும் மாதம் 2000 ரூபாய் வங்கி கணக்கில் வரபோகிறது.
More From GoodReturns

ரேஷன் கார்டு: தேர்தல் நடத்தை விதிகளுக்கு மத்தியில் வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அமெரிக்க தலைநகரை ஆளப்போகும் தமிழ் பெண்..!! தேனி டூ வாஷிங்டன்..!! யார் இந்த ரினி சம்பத்?

ஸ்டாலின் Vs ஈபிஎஸ் Vs விஜய் Vs சீமான்: பெண்களுக்காக இவர்கள் முன் வைக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications