சென்னையில் ஐடி துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டது டைடல் பார்க் எனும் ஐடி பூங்கா தான். அந்த வகையில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஐடி துறை வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் டைடல் பூங்காக்களை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஓசூர் நகரத்தில் பிரம்மாண்டமான முறையில் டைடல் பார்க் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான சுற்று சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்து இருக்கிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டின் ஆறாவது முக்கிய டைடல் பூங்காவாக ஓசூர் டைடல் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.

ஓசூர் நகரம் உற்பத்தி ரீதியாக பெயர் பெற்றது. ஏற்கனவே இங்கு வாகனம் , மின்சார வாகனம் , ஐபோன்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன, ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த சூழலில் அடுத்ததாக ஐடி மையமாகவும் ஓசூர் மாற இருக்கிறது. இந்த மாற்றத்தை வித்திடப் போவது ஓசூரில் அமைய இருக்கக்கூடிய டைடல் பூங்கா தான்.
தமிழ்நாடு அரசு ஓசூரில் 373 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான டைடல் பூங்கா அமைக்க இருக்கிறது. 5.55 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்த டைடல் புகார் தரைத்தளம் மற்றும் ஒன்பது தளங்களைக் கொண்டதாக திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த டைடல் பூங்கா வடிவம் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் கூட அண்மையில் வெளியிடப்பட்டன.
இந்த சூழலில் தான் டைடல் பூங்கா கட்டமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த டைடல் பூங்கா அமைக்கப்பட்டால் நேரடியாக 6 ஆயிரம் பேருக்கு ஐடி துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஐடி வேலை என்றாலே பெங்களூருக்கு தான் செல்ல வேண்டும் என என்ற நிலை இருந்தது ஆனால் இனி ஓசூர் இளைஞர்களுக்கு தங்களுடைய சொந்த ஊரிலேயே ஐடி வேலை வாய்ப்பு கிடைக்கும். இது ஒட்டுமொத்தமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்திருக்கிறது.
இதுவரை உற்பத்தி மையமாகவும் ஆட்டோமொபைல் துறையின் மையமாகவும் இருந்த ஓசூர் டைடல் பூங்கா பயன்பாட்டுக்கு வந்தவுடன் ஐடி மையமாகவும் மாறப்போகிறது. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த உடனேயே ஓசூர் டைலர் பூங்கா கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன் அடிக்கல் நாட்டு பணிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.ஏற்கனவே ஓசூரில் வர்த்தக மையம், அறிவுசார் வழித்தடம், விமான நிலையம் ஆகியவற்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக டைடல் பூங்கா பணிகள் வேகமெடுத்துள்ளன.


Click it and Unblock the Notifications