சென்னை: தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிலவரம் குறித்த சிஏஜி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் இது தொடர்பாக முதன்மை கணக்காளர் ஜெய்சங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது தமிழ்நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த பல முக்கியமான தகவல்களை அவர் வெளியிட்டார். இதன்படி 2022-23 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் ஜிடிபி 14% உயர்ந்து 23 , 64,514 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது என குறிப்பிட்டார். மேலும் தனி நபர் வருமானத்தில் தேசிய சராசரியை விட தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் 3.08 லட்சம் ரூபாயாக இருக்கிறது என தெரிவித்த ஜெய்சங்கர் இது தேசிய சராசரியை விட 56 சதவீதம் அதிகம் என குறிப்பிட்டார். ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் தனிநபர் வருமானம் 1.96 லட்சம் ரூபாயாக இருக்கிறது, எனவே தமிழ்நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என ஜெய்சங்கர் அப்போது பெருமிதம் தெரிவித்தார். இது தவிர தமிழ்நாட்டில் 2021 -22இல் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை 46,538 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2022-23 ஆம் ஆண்டில் அது 36 , 215 கோடி ரூபாய் என குறைந்துள்ளது என்றார்.
முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் வருவாய் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார். தொழில் மற்றும் சேவை துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளதால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மாநிலத்தின் ஜிடிபி வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நிதி பயன்பாட்டை பொருத்தமட்டில் வருவாய் செலவினம் முந்தைய ஆண்டை விட 10 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் 21,980 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் செலவுகளை ஈடுபட்ட முடியாத நிலையில் போக்குவரத்து கழகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊழியர்களுக்கான செலவினம் 55 சதவீதம் முதல் 63 சதவீதம் வரை உள்ளது என்றும் 2017 முதல் 2022 வரை 22,517 பேருந்துகள் இருந்த நிலையில் தற்போது 20,304 பேருந்துகள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வரி மற்றும் வரி அல்லாத வருவாய் அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட அவர் மாநில ஜி எஸ் டி மூலம் 53 ,823 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும், விற்பனை மற்றும் வர்த்தகத்தின் மூலம் கிடைத்த வரிகள் வாயிலாக 59 ,143 கோடி கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வரியில்லாத வருமானம் முந்தைய ஆண்டை விட 41% அதிகரித்து 4944 கோடி என உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார். 2023 24 ஆம் நிதியாண்டுக்குள் வருவாய் அதிகம் உள்ள மாநிலம் என்ற இலக்கை எட்ட வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது அந்த பாதையை நோக்கி மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என கூறினார்.
Story Written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications