சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஜூன் 14ஆம் தேதி, 2024 அன்று தமிழ் புதல்வன் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து அதன் பின் உயர்கல்வியை தொடரும் அனைத்து மாணவருக்கும் மாதம்தோறும் ரூ.1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிப்பது? போன்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொதுவாகவே தமிழக பட்ஜெட்டில் அதிக அளவிலான நிதி கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே பெண் கல்வியை ஆதரிக்கும் வண்ணம், புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவியருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ்ப்புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுமைப்பெண் திட்டத்தைப் போலவே ரூ.1,000 மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

சென்னையில் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மே மாதம் வெளியான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவர்களை மு.க ஸ்டாலின் பாராட்டினார். அதேபோல 2023ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டிற்கான பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற 1,728 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் அவர் பாராட்டினார்.
தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து மேடையில் பேசிய மு.க ஸ்டாலின், ஏற்கனவே மாணவியருக்கு வழங்கப்படும் ரூ. 1000 குறித்து கூறியுள்ளார். மேலும் இதே போன்ற சூழலை மாணவர்களுக்கும் ஏற்படுத்தித் தரவே இந்த தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க யாரெல்லாம் தகுதியானவர்கள்?: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர், தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர் ஒரு ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். மேலும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அதன் பின் உயர்கல்வி பெறுபவராக இருக்க வேண்டும்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், ஸ்கூல் ஐடி கார்டு, மார்க் சீட், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மொபைல் நம்பர்.
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?: பயிலும் கல்வி நிறுவனங்களில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமா? அல்லது அதற்கென்று பிற இணையதளங்கள் உள்ளனவா? என்பதற்கான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் இதற்கான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவியர்கள் மட்டுமல்லாமல் மாணவர்களும் தங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்கள் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்தத் தொகை கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கல்வி பயிலும் நேரத்தில், இதுபோன்ற அரசாங்க உதவிகள் கிடைப்பதனால், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களும் தங்களுடைய பெற்றோரை தொந்தரவு செய்யாமல் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications