இந்த உலகை பல தசாப்தங்களாக நிலக்கரி மின்சார உற்பத்தி மூலம் இயக்கப்பட்டு வந்தாலும், இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் என்றும், இதில் இருந்து மீண்டு வர அணு மின்சார உற்பத்தி சிறந்தது என கடந்த சில வருடங்களாக சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஸ்வீடனில் உள்ள மிகவும் பெரிய மற்றும் மதிப்புக்குரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான கே.டி.எச் (KTH) இல் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துகுமார் என்ற மாணவர் ட்விட்டரில் ஒரு பதிவை செய்து பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அந்த பதிவு அறிவியல் ஆர்வலர்களையும், பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

முத்துகுமாரின் தனது ட்விட்டர் பதிவில், "நான் 10 டன் நிலக்கரிக்கு சமமான பொருளை கையில் வைத்திருக்கிறேன். இது என்னவென்று யூகிக்க முடியுமா?" என்று பதிவிட்டார். இந்த பதிவிற்கு பலரும் பதில் அளித்தனர்.
இந்த சிறிய கோலிக்குண்டு போல் இருக்கும் பொருளின் பெயர் "யுரேனியம் ஆக்சைடு பெல்லட் (U238)".
இந்த யுரேனியம் ஆக்சைடு பெல்லட் ஒன்று ஒரு வீட்டிற்கு ஒரு வருடத்திற்கு மின்சாரம் தரும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. 10 கிராம் எடையுள்ள இந்த பெல்லட், 10 டன் நிலக்கரிக்கு சமம் என்றால் உங்களால் நம்ப முடியுமா.
யுரேனியம் கதிர்வீச்சு கொண்ட பொருள் என்பதால் பலரும் இதை கையில் எடுப்பதால் கதிர்வீச்சு ஆபத்து குறித்து கேட்டனர். இதேபோல் அணு எரிபொருள் மேலாண்மை குறித்தும் பலரும் கேள்வி எழுப்பினர் இதற்கும் முத்துகுமார் பதில் அளித்தார்,
முத்துகுமார் கூறுகையில், "இதன் கதிர்வீச்சு அளவு மணிக்கு சுமார் 60 மைக்ரோ சீவெர்ட் (microS/h) மட்டுமே. இது அவ்வளவு அதிகமாக இல்லை. மேலும், ஒரு காகிதம் அல்லது கையுறை (ஆல்பா கதிர்வீச்சு பாதுகாப்புக்கு போதுமானது) கொண்டு இந்த கதிர்வீச்சை தவிர்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
முத்துகுமார் குறிப்பிட்டுள்ளபடி, அவர் புகைப்படத்திலும் கையுறை அணிந்திருந்தார். இது ஆல்பா கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்புக்கு போதுமானது. ஆனால், இந்த பெல்லட் செறிவூட்டப்பட்ட பிறகு, ஆபத்தான காமா கதிர்வீச்சை வெளியிடும் ஆபத்தை கொண்டு உள்ளது.

முத்துகுமார் தனது பதிவில் ஸ்வீடன் அணு எரிபொருள் மற்றும் கழிவு மேலாண்மையில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்று என கூறினார். அங்கு, ஒவ்வொரு மின்சார நிறுவனமும் தங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு கிலோவாட் (kWh)க்கும் சிறிய தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம், ஆராய்ச்சிக்காக இன்று பல பில்லியன் கிரோனர்கள் (ஸ்வீடன் நாணயம்) சேகரிக்கப்படுகிறது எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications