TMB வங்கி நிர்வாக இயக்குநர் திடீர் ராஜினாமா.. சென்னை கேப் ஓட்டுனர் ரூ.9000 கோடி டெபாசிட் எதிரொலியா?

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல மாநிலங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் சங்கரசுப்ரமணியம் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் சென்னை டாக்சி ஓட்டுநரின் வங்கி கணக்கில் தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி நிர்வாகம் கவனக் குறைவாக சுமார் 9000 கோடி ரூபாயை மாற்றிய பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த பிரச்சனையில் வங்கியில் பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என்றாலும் இந்த பணத்தை பெறுவதில் சில பல சவால்கள் எதிர்கொண்டது தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி.

TMB வங்கி நிர்வாக இயக்குநர் திடீர் ராஜினாமா.. சென்னை கேப் ஓட்டுனர் ரூ.9000 கோடி டெபாசிட் எதிரொலியா?

இந்த பிரச்சனை முடிந்து வெறும் ஒரு வாரத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி லிமிடெட் (டிஎம்பி) நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் சங்கரசுப்ரமணியம் பர்சனல் காரணத்திற்காக ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து கிருஷ்ணன் சங்கரசுப்ரமணியம் கூறுகையில் என்னுடைய பதவி காலத்தில் சுமார் 3ல் இரண்டு பகுதி காலம் உள்ளது என்றாலும், தனிப்பட்ட காரணங்களால், வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என கூறினார்.

மேலும் TMB வங்கிக்கு ஒரே ஒரு முழுநேர இயக்குனர் மட்டுமே இருப்பதால், இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை விரைவில் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று சங்கரசுப்ரமணியம் செப்டம்பர் 28, வியாழக்கிழமை வெளியிட்ட தனது ராஜினாமா குறித்த அறிக்கையில் தெரிவித்தார்.

இதேவேளையில் கிருஷ்ணன் சங்கரசுப்ரமணியம் சமர்ப்பித்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு TMB வங்கி நிர்வாகம் அதை இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) அனுப்பியுள்ளது. இந்த நிலையில் தற்போது ஆர்பிஐ வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்காக காத்திருக்கிறது TMB நிர்வாகம். இந்த காலக்கட்டத்தில் கிருஷ்ணன் இப்பதவியில் தொடர்வார்.

TMB வங்கி நிர்வாக இயக்குநர் திடீர் ராஜினாமா.. சென்னை கேப் ஓட்டுனர் ரூ.9000 கோடி டெபாசிட் எதிரொலியா?

கிருஷ்ணன் சங்கரசுப்ரமணியம் TMB வங்கியின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்க 18 ஆம் தேதி ஆகஸ்ட் 2022ல் ஆர்பிஐ ஒப்புதல் கொடுத்தது. இவருடைய பணி காலம் செப்டம்பர் 2, 2022ல் துவங்கி அடுத்த 3 வருடத்திற்கு அறிவிக்கப்பட்டு உள்ள வேளையில், 13 மாதத்தில் தனிப்பட்ட காரணத்திற்காக இப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

செப்டம்பர் 4, 2020 முதல் மே 31, 2022 வரை பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். ஏப்ரல் 1, 2020 முதல் செப்டம்பர் 3, 2020 வரையில் கனரா வங்கியின் நிர்வாக இயக்குனராக இருந்தார். கனரா வங்கிக்கு முன்பு, நவம்பர் 1, 2017 முதல் மார்ச் 31, 2020 வரை சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+