தமிழ்நாடு கடந்த 2 ஆண்டுகளாக, தொழில்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 3,89,661 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இந்த 221 ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 270,020 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்படும் என தமிழ்நாடு அரசு தனது 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த முதலீடுகளின் பலன்களை ஒருங்கிணைத்து, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 நாட்களில் சென்னையில் நடத்தப்படவுள்ளது என பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு
தொழில் வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்க வேண்டும் என்பது தமிழக அரசின் குறிக்கோள் என்று பேசிய நிதியமைச்சர், சமீபத்தில் அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 85 தொழில் திட்டங்கள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பின்தங்கிய மாவட்டங்கள்
இதன் மூலம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் 214,478 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இத்திட்டங்களின் மூலம் 144,028 கோடி ரூபாயும் இந்த மாவட்டத்தில் முதலீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வியல் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 கொள்கைகள்
மேலும் நிதியமைச்சர் இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து திட்டமிட்ட தொழில் வளர்ச்சியை மேம்படுத்த துறை சார்ந்த புதிய 10 கொள்கைகளை வெளியிட்டு உள்ளதாக தெரிவித்தார்.
நிதிநுட்ப கொள்கை
ஆராய்ச்சி மறஅறும் வளர்ச்சி கொள்கை
உயிரியல் கொள்கை
ஏற்றுமதிக் கொள்கை
வான்வெளி மற்றும் பாதுகாப்பு கொள்கை
காலனி மற்றும் தோல் கொள்கை
மின்சார வாகன கொள்கை
லாஜிஸ்டிக்ஸ் கொள்கை
நகர எரிவாயு வழங்கல் கொள்கை
எத்தனால் கொள்கை
எலக்ட்ரிக் வாகனம்
இந்தியாவிலேயே வாகன உற்பத்தியில் தமிழ்நாட்டின் சென்னை - திருப்பெரும்புதூர் பகுதி முதன்மையான இடத்தில் உள்ளது, வழக்கமாக பெட்ரோல், டீசல் எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்கள் தான் இப்பகுதியில் அதிகம் உற்பத்தி செய்யப்படும்.
46 சதவீத உற்பத்தி
ஆனால் தற்போது இந்தியாவில் அதிகம் பிரபலமாகி வரும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு முதன்மையான இடத்தில் உள்ளது முக்கியமாகும். இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஒட்டுமொத்த EV-க்களில் சுமார் 46 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications