தமிழ்நாட்டின் வர்த்தகம், வேலைவாய்ப்பு, முதலீடு அனைத்தும் பெரும்பாலான காலகட்டத்தில் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளை மட்டுமே சார்ந்து இருந்த காலகட்டம் மறைந்து மாநிலத்தின் வளர்ச்சி வேகத்தை மேம்படுத்தப் பல மாவட்டங்களை முக்கிய இலக்காகக் கொண்டு வளர்ச்சி திட்டங்களையும், முதலீடுகளையும் ஈர்க்கப்பட்டு வருகிறது.
சொல்லப்போனால் இந்த டிரெண்ட் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் உள்ளது. இது லாக்டவுன் காலத்தில் மிகவும் சிரீயஸாக மாறியது. டெக் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் GCC வரையில் பல துறை சேர்ந்த நிறுவனங்கள் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்குப் படையெடுத்து வருகிறது.

2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் கடந்த சில வருடங்களாக உருவான உள்கட்டமைப்பு வளர்ச்சி, திறன்கள், ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அரசின் புதிய முயற்சிகளால் தூண்டப்பட்டுச் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் Deloitte India மற்றும் Nasscom அமைப்பு நாட்டில் டெக் ஹப்-களாக வேகமாக வளர்ச்சி அடையும் 26 2ஆம் தர நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் 4 நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பிற மாநிலங்களில் 1, 2, அதிகப்படியாக 3 நகரங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டு உள்ளது.
ஆந்திர பிரதேசம் : திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம்
அசாம் : கவுகாத்தி
சத்தீஸ்கர் : ராய்பூர்
குஜராத் : அகமதாபாத்
ஜார்கண்ட் : ராஞ்சி
கர்நாடகா : ஹுப்லி, மங்களூரு, மைசூரு
கேரளா : கொச்சி, திருவனந்தபுரம்
மத்திய பிரதேசம் : போபால், இந்தூர்
மகாராஷ்டிரா : நாக்பூர், நாசிக்
ஒடிசா : புவனேஷ்வர்
பஞ்சாப் & ஹரியானா : சண்டிகர்
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர்
தமிழ்நாடு : கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, வேலூர்
தெலுங்கானா : வாரங்கல்
உத்தரப் பிரதேசம்: கான்பூர், லக்னோ
Deloitte India மற்றும் Nasscom அமைப்பின் ஆய்வுகள் படி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, வேலூர் ஆகியவை டெக் ஹப்-களாக மாறி வருகிறது. பொதுவாக டெக் நிறுவனங்கள் பெரிய நகரங்களை விடுத்து சிறிய நகரங்களுக்கு வர முக்கியமான காரணம் பணம் மட்டுமே.
பெரு நகரங்களைக் காட்டிலும் சிறு நகரங்கள் சம்பள செலவுகள் கிட்டத்தட்ட 25% -30% குறைவாகவும், பெரு நகரங்களை ஒப்பிடும்போது ரியல் எஸ்டேட் வாடகையில் 50% செலவு குறைவாக இருக்கிறது. மேலும் வளர்ந்து வரும் 26
தொழில்நுட்ப மையங்கள், உலகளாவிய டிஜிட்டல் சேவையின் தேவையைப் பூர்த்தி செய்வது மட்டும் அல்லாமல் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது என Deloitte India மற்றும் Nasscom அமைப்பின் ஆய்வுகள் கூறுகிறது.
தற்போது, இந்தியாவின் 11%-15% தொழில்நுட்ப திறமைகள் பெற்றவர்கள் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் உள்ளனர், இந்தியாவில் பொறியியல், கலை மற்றும் அறிவியலில் பட்டம் பெற்றவர்களில் 60% பேர் சிறிய நகரங்களில் உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் தற்போது 140 க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) ஏற்கனவே கடையை விரித்துள்ளது.
மேலும் நாட்டின் 2ஆம் தர நகரங்கள் இன்னோவேஷன்-க்கு முக்கியத் தளமாக மாறிவிட்டன. நாட்டின் மொத்த ஸ்டார்ட்அப்களில் சுமார் 39% ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கிட்டத்தட்ட 7,000 அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 2ஆம் தர நகரங்களில் Deep Tech முதல் BPM வரையிலான பல துறையில் பரந்து விரிந்து உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications