கடந்த வியாழக்கிழமையன்று மட்டும் 16 நிறுவனங்கள் சுமார் 5,100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படலாம். இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம் 6,500-க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் 30,664 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் பல ஆயிரம் கணக்கான பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
வேலை வாய்ப்பு உருவாக்கப்படலாம்
இந்த முதலீடுகளின் மூலம் தமிழகத்தில் 67,212 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஜூலை 20ம் தேதி எட்டு நிறுவனங்கள் 10,399 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதே கடந்த மே 27ம் தேதியன்று 17 நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அண்மையில் போடப்பட்ட ஒப்பந்தங்கள்
இந்த ஒப்பந்தம் மூலம் 15,128 கோடி ரூபாய் முதலீடுகள் தமிழகத்தில் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 47,150 பேருக்கு நல்லதொரு வாய்ப்பினை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூலை 23 அன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 16 நிறுவனங்கள் 5,137 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 6,555 வேலைகள் உருவாக்கப்படலாம்.
கொரோனா ரணகளத்திலும் அதிக முதலீடு
புதிய திட்டங்களில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தரவு மையம் அருகிலுள்ள செங்கல்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுசேரியில் 2,300 கோடி ரூபாய் முதலீடும் இதில் அடங்கும். இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைகள் அதிகரிக்கப்படும். இப்படி பல அதிரடியான காலத்திலும் கூட, அதிகப்படியான முதலீடுகளை தமிழகம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த நிறுவனங்கள்?
இந்த முதலீடுகள் ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர், பின்லாந்தினைச் சேர்ந்த சால்காம் நிறுவனம், தைவானின் அஸ்தான் ஷூஸ் நிறுவனம், இங்கிலாந்தின் ஜெனரேஷன் நிறுவனம், பிரான்சின் விசிட்சோலார் எனர்ஜி நிறுவனம், அமெரிக்காவின் ஹெச் டிசியை நிறுவனம், விக்ரம் சோலார் நிறுவனம் உள்ளிட்ட பல அன்னிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications