தமிழர் பாரம்பரியமான பொங்கல் திருவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே மக்களுக்கு சந்தோசத்திற்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளும் விறுவிறுப்பு குறையாத அளவிற்கு இருக்கும். அந்த வகையில், அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்கள் ஜல்லிக்கட்டுக்கென்றே பெயர் பெற்றுள்ளன.
இந்த நிலையில், இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை 7 மணிக்கு தொடங்கி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 3 சுற்றுகள் முடித்துள்ளன. 3 வது சுற்று முடிவில் மொத்தம் 12 பேர் காயமடைந்துள்னனர். அதில் ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 150க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்: அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா துவக்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் பிடிக்கின்றனர். ஒவ்வொரு காளையை அவிழ்த்து விடும்போதும் இரு சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அறிவிக்கப்படுகின்றன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முதல் சுற்றில் 77 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. பார்வையாளர்களின் ஆரவாரத்திற்கு நடுவே மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடித்து வருகின்றனர். 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை 12 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிறிய அளவில் காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர்.
போட்டி நேரம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1100 காளைகள் களமிறங்கும் என்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்க உள்ளனர்.
அந்த வகையில், போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு மாடுபிடி வீரர்கள், சீருடைகள் அணிந்து பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டியானது மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது. போட்டி நேரம் நீட்டிப்பு செய்வது தொடர்பாக போட்டியின் நிலையை பொறுத்து மாவட்ட ஆட்சியரால் முடிவு எடுக்கப்படும். தற்போது மதியம் 12.30 மணியளவில் 6-வது சுற்று விறுவிறுவென நடந்து வருகிறது. 5 சுற்றுகளின் முடிவில் 25 காளைகள் பிடிப்பட்டன. இதுவரை 295 காளைகள் வெளியேற்றப்பட்டன. அதேபோல் 16 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இவை போலி ஆவணங்கள், காயம் உள்ளிட்டவைகளால் தகுதி நீக்கம் ஆனது.
பரிசுகள்: போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு 8 லட்சம் மதிப்பிலான நிசான் கார் பரிசும், சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு 11 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வாகனமும் முதல் பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்கும் அனைத்து மாடுகளுக்கும் ஒரு அண்டா, ஒரு வேஷ்டி பரிசாக வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடு: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருகை புரிந்துள்ளனர். எனவே பாதுகாப்பிற்கான 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசரகால மருத்துவ தேவைக்காக குழுக்களும், கால்நடை மருத்துவக் குழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ்களும், தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications