இந்தியா-வை கலக்கும் தமிழ்நாட்டு வங்கிகள்.. அப்பவே அப்படி..!

இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு எப்போதுமே புதுமைகளிலும், சமூக மாற்றத்திலும் ஒரு படிக்கு மேல் என்றால் மிகையில்லை.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு அதை அடிப்படையில் இருந்து மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்து 100 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட வங்கிகள் இன்று நாட்டின் முக்கியமான வங்கிகளாக மாறி நிற்கிறது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழகத்தில் வேரூன்றித் துவங்கப்பட்ட வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தற்போது நாடு முழுவதும் பரவி, தனது நீண்ட பாரம்பரியமான தொழில்முனைவோர் மற்றும் புதுமை முயற்சிகளைத் தற்போது பணமாக்கிக் கொண்டிருக்கின்றன.

100 வருடங்கள்

100 வருடங்கள்

100 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சமூக அடிப்படையிலான வங்கிகள் தற்போது நாட்டின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான நிதி நிறுவனங்களாக வளர்ச்சியடைந்துள்ளன. இந்தியாவில் 100 வருடங்களைக் கடந்த வெகு சில வங்கிகளில் 4 வங்கிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தது, இதில் ஒரு பொதுத்துறை வங்கி, 3 தனியார் வங்கியாகும்.

3 தனியார் வங்கி

3 தனியார் வங்கி

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சிட்டி யூனியன் வங்கி 1904 இல் 'தி கும்பகோணம் வங்கி லிமிடெட்' ஆகத் துவங்கப்பட்டது.

கரூர் வைஸ்யா வங்கி 1916 இல் கரூரில் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடியைத் தளமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 1921 இல் தி நாடார் வங்கி லிமிடெட் என நிறுவப்பட்டது.

3 லட்சம் கோடி ரூபாய்

3 லட்சம் கோடி ரூபாய்

இந்த மூன்று வங்கிகளும் நாட்டின் பல பகுதிகளில் வங்கி கிளைகளை வைத்து உள்ளன. செப்டம்பர் 30, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி,தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி இணைந்து மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகத்தை வைத்துள்ளது.

இந்தியன் வங்கி - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் வங்கி - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

பொதுத்துறை வங்கி பிரிவில், 1907ல் நிறுவப்பட்ட இந்தியன் வங்கி நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 10,26,801 கோடி ரூபாய் அளவிலான மொத்த வணிகத்தைக் கொண்டு உள்ளது. இதேபோல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 4,34,441 கோடி அளவிலான வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.

மெட்ராஸ் பிரசிடென்சி

மெட்ராஸ் பிரசிடென்சி

இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விரு வங்கிகளுக்கு மியான்மர், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை-யில் கூட வங்கி கிளை உள்ளது. தற்போது, இரண்டு பொதுத் துறை வங்கிகளும் சேர்ந்து நாடு முழுவதும் சுமார் 8,950 வங்கி கிளைகளைக் கொண்டுள்ளன.

 பார்தா பிரதீம் சென்குப்தா

பார்தா பிரதீம் சென்குப்தா

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் MD மற்றும் CEO பார்தா பிரதீம் சென்குப்தா கூறுகையில், தமிழ்நாட்டில் புதிய வர்த்தகத்திற்குள் நுழைய வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளை ஆராய்வதில் ஆர்வமுள்ள பல தொழில்முனைவோர் சமூகங்கள் இந்த மாநில உள்ளன. பல காலாண்டுகளாகத் தொடர்ந்து 100 சதவீதத்திற்கும் அதிகமான கடன்-வைப்பு (சிடி) விகிதத்தைக் கொண்ட சில மாநிலங்களில் தமிழ்நாடு மிகவும் முக்கியமான ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.

தொழில் முனைவோர் கலாச்சாரம்

தொழில் முனைவோர் கலாச்சாரம்

தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் கலாச்சாரம் பல தசாப்தங்களாக இருப்பது மட்டும் அல்லாமல் அது அனைத்து தரப்பினருக்கும் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கக் கூடியதாக இருந்த காரணத்தால் வளர்ச்சி என்பது பரவலாக அனைத்து மட்ட மக்களிடத்திலும் இருந்தது. அது மாநிலத்தை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.

வர்த்தகக் குடும்பங்கள்

வர்த்தகக் குடும்பங்கள்

இதேபோல் தமிழ்நாட்டில் பல வர்த்தகக் குடும்பங்கள் NBFC, ஹவுசிங் பைனான்ஸ், இன்சூரன்ஸ், ஸ்டாக் ப்ரோகிங் போன்ற பல துறையிலும் இயங்கி வருகிறது. இதில் டிவிஎஸ், முருகப்பா, ஸ்ரீராம் குழுமங்களும் அடக்கம்.

முருகப்பா குழுமம் - சோழமண்டலம் ஃபைனான்ஸ்

முருகப்பா குழுமம் - சோழமண்டலம் ஃபைனான்ஸ்

முருகப்பா குழுமத்தின் நிதிச் சேவைப் பிரிவான சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட், 1978 இல் துவங்கப்பட்டது. சோழமண்டலம் நிறுவனம் தற்போது 28 மாநிலங்கள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உட்பட 1,151 கிளைகளைக் கொண்டுள்ளது. செப்டம்பர் 30, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி சுமார் ரூ.91,841 கோடிய் மதிப்பிலான சொத்துக்கள் (AUM) நிர்வாகம் செய்து வருகிறது.

ஸ்ரீராம் குழுமம்

ஸ்ரீராம் குழுமம்

ஸ்ரீராம் குழுமம் வர்த்தக வாகனம் மற்றும் ரீடைல் பைனான்சிங் முதல் சிட் ஃபண்டுகள், காப்பீடு மற்றும் வெல்த் அட்வைசரி சர்வீஸ் வரையிலான சேவைகளை வழங்கி வருகிறது. மார்ச் 31, 2022 நிலவரப்படி 2.1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான AUM கொண்டுள்ளது. 84,000 ஊழியர்களுடன் நாடு முழுவதும் 4,500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நியூ ஜெனரேஷன் வங்கியாகத் திகழ்கிறது ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி. 2023 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 22,779 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது. ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 2016 துவங்கினாலும் 2007 முதல் மைக்ரோபைனான்ஸ் அமைப்பாக 4 கிளைகள் உடன் துவங்கியது.

சமூகச் சேவை சமூகச் சேவை

சமூகச் சேவை சமூகச் சேவை

Equitas Microfinance Ltd சமூகச் சேவைகளை வழங்குவதற்காக 2008 இல் Equitas Development Initiatives Trust (EDIT) ஐ நிறுவியது. EDIT ஆனது 2010 இல் ஈக்விடாஸ் குருகுல மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நிறுவியது குறிப்பிடத்தக்கது.

சோழமண்டலம் டி அருள் செல்வன்

சோழமண்டலம் டி அருள் செல்வன்

வாடிக்கையாளர்கள் நிதி நெருக்கடியில் இருக்கும் போது NBFC மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதே அதன் வெற்றிக்கு ஒரு காரணம் என்கிறார் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் தலைவர் டி அருள் செல்வன். அடுத்த இரண்டு ஆண்டுகளில், நிறுவனம் 400 கிளைகளைச் சேர்த்து மொத்தம் 1,550 கிளைகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+