இந்திய மக்களின் தனிநபர் வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. 2012-13 நிதியாண்டில் இந்தியாவின் தனிநபர் வருமானம் தற்போதைய நாணய மதிப்பில் ரூ.70,983 ஆக இருந்த நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் 1.72 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளில் இந்திய மக்களின் தனிநபர் வருமானம் 143 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.
இந்த தடாலடி உயர்வுக்கு பல மாநிலங்களின் வலுவான பொருளாதார வளர்ச்சி முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் தனிநபர் வருமானத்தில் அதிகப்படியான வளர்ச்சியை பதிவு செய்த டாப் 10 மாநிலங்கள் எது..? இதில் தமிழ்நாட்டின் நிலை என்ன..? முதலிடத்தில் இருக்கும் மாநிலம் எது..? அனைத்து கேள்விக்கான பதில்களை அடுத்தடுத்து தெரிந்துக்கொள்வோம்.

CMIE மற்றும் PIB தரவுகள் படி இந்திய மக்களின் தனிநபர் வருமானம் கடந்த வருடத்தில் வருடாந்திர அடிப்படையில் சுமார் 9.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் வேகமாக வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகா 14.7 சதவீத CAGR வளர்ச்சி உடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 10 வருடத்தில் கர்நாடக மாநில மக்களின் தனிநபர் வருமானம் 76,578 ரூபாயில் இருந்து 3.02 லட்சம் ரூபாய் என 294 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த பட்டியலில் தெலுங்கானா 262 சதவீத வளர்ச்சியில் 85,169 ரூபாயில் இருந்து 3.09 லட்சமாக உயர்ந்து 2வது இடத்தையும், மத்திய பிரதேசம் 224 சதவீத வளர்ச்சியில் வெறும் 43,426 ரூபாயில் இருந்து 1.41 லட்சம் ரூபாயாக உயர்ந்து 3வது இடத்தை படித்துள்ளது.
இதை தொடர்ந்து ஒடிசா (1.51 லட்சம் ரூபாய்), அஸ்சாம் (1.19 லட்சம் ரூபாய்), ஆந்திர பிரதேசம் (2.20 லட்சம் ரூபாய்), குஜராத் 10 வருடத்திற்கான தரவுகள் இல்லாத நிலையில் 9 வருட தரவுகள் படி (2.5 லட்சம் ரூபாய்) என 4 முதல் 7 இடங்களை படித்துள்ளது.
தமிழ்நாடு டாப் 10 பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது, தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் கடந்த 10 வருடத்தில் 98,628 ரூபாயில் இருந்து 2.73 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 10 வருடத்தில் மொத்தமாக 177 சதவீதமும், CAGR அடிப்படையில் 10.73 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளா (2.29 லட்சம் ரூபாய்) 9வது இடத்திலும், ராஜஸ்தான் (1.56 லட்சம் ரூபாய்) 10வது இடத்திலும் உள்ளது. டாப் 10 பட்டியலில் இடம்பெற்ற மாநிலங்களில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுவது மத்திய பிரதேசம் தான், இந்தியாவில் பொருளாதாரத்திலும், சமுக காரணிகளிலும் பின்தங்கிய மாநிலங்களாக BIMARU ஸ்டேட்ஸ் பட்டியலில் இருந்து பெரிய அளவில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications