இன்றைய தமிழக பட்ஜெட் அறிக்கையில் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
அதில் பலவும் ஏழை எளிய மக்களுக்கு பலன் கொடுக்கும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் தான் அனைவருக்கும் வீடு. இதன் மூலம் குடிசைகளில் வாழும் மக்கள் பயன்பெற முடியும்.
ஏழைகளுக்கு வீடு
இதன் மூலம் 2021-22-ல் 8,017 கோடி ரூபாய் செலவில் சுமார் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும். இதே போன்று கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கும் 5 ஆண்டுகளில் வீடுகள் கட்டித்தரப்படும். கிராமப்புற வீட்டு வசதி திட்டத்துக்கு 3,548 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
மொத்தம் 5 ஆண்டுகளில் எத்தனை வீடுகள்
கிராமங்களில் 8,03,924 ஏழைகளுக்கு 5 ஆண்டுகளில் வீடுகள் கட்டித்தரப்படும். இதன் மூலம் 10 ஆண்டுகளில் குடிசைகள் அற்ற மாநிலமாக விளங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக குடிசை மாற்று வாரியத்துக்கு 3,954 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு ஒன்றினை அரசு கொடுத்துள்ளது.
ரேஷன் கடைகள் தேவை எங்கு?
இதேபோல ரேஷன் கடைகள் தேவையுள்ள தமிழகத்தின் பல்வேறு இடங்களை கண்டுபிடிக்க அரசு அதற்காக நடவடிக்கையெடுக்கும் எனவும் அதற்கென தனிக்குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இது உண்மையில் மக்கள் அணுகுவதற்கு எளிதாக இருக்கும் என்பதோடு, ஒரே நாடு ஒரே அட்டை முழுமையாக அமலுக்கு வரும்பட்சத்தல் இது இன்னும் வரவேற்க தக்க விஷயமாக இருக்கும்.
பொது விநியோகத் திட்டத்தில் மானியம் அதிகரிப்பு
பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக நிதி ஒதுக்கீடு 8,437.57 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இன்னும் ஏழைய எளிய மக்களுக்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கும், பொருட்கள் இல்லை என்று கூறாமல் தடையற்று சென்று வாங்கவும் வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications