தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இருந்தாலும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிக் குறைப்பு அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும் தமிழக அரசு மத்திய அரசை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைக்கவும், புதிதாக அறிவிக்கப்பட்ட கூடுதல் வரியையும் குறைக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம்
தமிழ்நாட்டில் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாகத் தொழில் துவங்க விரும்பும் 62 நிறுவனங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், பல்வேறு வீடு மற்றும் கட்டுமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் சென்னையில் இருக்கும் மெட்ரோ திட்டத்தைப் போலவே கோவையிலும் புதிதாக மெட்ரோ ரயில் சேவை திட்டம் கொண்டு வரத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அரசு பணியாளர்கள்
இந்நிலையில் அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்காகத் தமிழக அரசு 1,02,049 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக இடைக்காலப் பட்ஜெட் தாக்கலின் போது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார்.
மருத்துவக் காப்பீடு
இதுமட்டும் அல்லாமல் அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு இதுவரையில் நடைமுறையில் இருக்கும் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு தொகையை 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
காப்பீட்டு அளவில் ஏற்பட்டு உள்ள உயர்வு அரசு ஊழியர்களுக்கு ஒரு ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க இந்தக் காப்பீட்டு அளவில் ஏற்பட்டுள்ள உயர்வு பெரிய அளவில் நன்மை அளிக்கும். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு இந்த இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையின் ஜாக்பாட் ஆக விளங்குகிறது.
அரசு ஊழியர்கள் சம்பளம்
இதேபோல் கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு எவ்விதமான தடையுமின்றி சம்பளம் அளிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது எனத் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்தார். கொரோனா காலத்தில் அதிகளவிலான வருமான மற்றும் வரி வசூல் அளவீட்டில் பெரும் பதிப்பை எதிர்கொண்டாலும் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தை முழுமையாகக் கொடுத்துள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications