2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை இன்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தரவுகள் அடிப்படையிலான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதியமைச்சர் இந்த பட்ஜெட் அறிக்கையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இதேபோல் தமிழ்நாட்டின் மனிதவளம் தொழிற்துறை மற்றும் வெளிநாட்டு முதலீட்டுக்கு ஏற்ப மேம்படுத்த முக்கியமான திட்டங்களை இந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தரவுகள் அடிப்படையிலான நிர்வாகம்
தரவுகள் அடிப்படையிலான நிர்வாகம் மூலம் அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளைக் களைய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேர் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
கல்வி உதவித் தொகை
பல்வேறு அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையில் உள்ள தேவையற்ற தாமதங்களைக் குறைக்கவும். தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் நேரடிப் பணப்பரிமாற்ற முறையில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த உதவித்தொகை இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.
மனிதவளம்
மனிதவளமே மாநிலத்தின் மாபெரும் செல்வம் என்பதை உணர்ந்துள்ள இந்த அரசு. அதனை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேர் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
திறன்மிக்க பணியாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க பணியாளர்களே பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஒரு முக்கியக் காரணி என்பதை நன்கு அறிந்துள்ளோம், ஆகவே மின்னல் வேகத்தில் மாறி வரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்குவதற்கு 2877 கோடி ரூபாய் செலவில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது.
புதிய பாடப் பிரிவுகளில்
நடப்பு கல்வி ஆண்டிலேயே இப்பணிகள் முடிக்கப்பட்டு புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேர் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
தொழில்துறை 4.0 தரம்
இதன் அடுத்த கட்டமாக தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0 தரத்திற்கு ஏற்ப பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் அரசு தொடங்கும். இந்த கூட்டணி மூலம் 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்படும் என பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு பயற்சி
பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உலகம் தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கத்துடன் 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் (TN-WISH) அமைக்கப்படும்.
முக்கிய துறை
இந்த மையத்தில் Mechatronics, Interner of things, அதிநவீன வாகன தொழில்நுட்பம், துல்லிய பொறியியல் மற்றும் உயர்தர வெல்டிங் போன்ற தொழில்நுட்பங்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications