தமிழ்நாடு அரசு இன்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தது. தமிழ்நாடு நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தாக்கல் செய்தார்.
முக ஸ்டாலின் தலைமையிவான திமுக 2021ல் ஆட்சியைப் பிடித்ததையடுத்து 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசு தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை அறிக்கையை தாக்கல் செய்தது. இதன் பின்னர் 2022-ம் ஆண்டு 2-வது பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் இன்று மார்ச் 20 ஆம் தேதி தமிழநாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 3-வது பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு அரசு விவசாய துறைக்கு தனி பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறது.
தமிழ்நாடு அரசு பட்ஜெட் 2023
தமிழ்நாடு அரசு 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்றுள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவுப்புகளை அனைத்து தரப்பு மக்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக திமுக கட்சியின் ஐடி விங் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
திமுக கட்சியின் ஐடி விங்
தமிழ்நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தக்கல் செய்யப்பட்டு உள்ளதால் இதன் முக்கியதுவத்தை உணர்ந்து திமுக கட்சியின் ஐடி விங் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து வாட்ஸ்அப் மூலம் மக்களுக்கு அளிக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது.
வாட்ஸ்அப்
தமிழ்நாடு 2023-24 பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்றுள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவுப்புகளை உடனுக்குடன் மக்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அளிக்க உள்ளது திமுக கட்சியின் ஐடி விங். இதற்கு 7092002002 என்ற மொபைல் எண்ணுக்கு HI என்று வாட்ஸ்அப்-ல் மெசேஜ் அனுப்பினால் பட்ஜெட்டில் இருக்கும் புதிய திட்ட அறிவிப்புகள் குறித்த தகவல்களை பெறலாம்.
பொது பட்ஜெட், விவசாய பட்ஜெட்
இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு HI என்று மெசேஜ் அனுப்புவது மூலம் தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் அறிக்கை 2023-24, விவசாய பட்ஜெட் 2023-24 அறிக்கையில் இடம்பெற்றுள்ள புதிய திட்ட அறிவிப்புகள் குறித்த தகவல்களை பெறலாம்.


Click it and Unblock the Notifications