தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக நிர்வாகம், வேலைவாய்ப்பு, கல்வி, முதலீடுகள், கட்டமைப்புகள் மேம்பாடு என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 2வது முழு பட்ஜெட் அறிக்கையை இன்று நிதியமைச்சர் பிடிஆர் இன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொங்கு மண்டலம் முக்கியமானதாக இருக்கும் நிலையில், தமிழக பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்ற சேலம், கோவை, ஈரோடு பகுதியை சார்ந்த முக்கியமான அறிவிப்புகள்.
கோவை, சேலம் இலவச வைஃபை
சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை WiFi வசதி செய்து தரப்படும் என தமிழ்நாடு அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சில முக்கிய நகரங்களிலும், உலக நாடுகளிலும் இருப்பது போலவே தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இண்டர்நெட் சேவை அளிக்கப்பட உள்ளது.
சேலத்தில் ஜவுளி பூங்கா
சேலத்தில் 800 கோடி ரூபாயில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சேலத்தை சுற்றியுள்ள இளம்பிள்ளை, ஓமலூர், பவானி, கொமாரபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த வர்த்தகத்தை மேம்படுத்த சேலம் ஜவுளி பூங்கா பெரிய அளவில் மேம்படும்.
ஜவுளி ஏற்றுமதி
ஜவுளி ஏற்றுமதியில் இந்திய அளவில் தமிழ்நாடும் முக்கிய மாநிலமாக இருக்கும் வேளையில், இதில் திருப்பூர் மட்டுமே பெரும் பங்கீட்டை கொண்டு உள்ளது. தற்போது திரூப்பூர்-க்கும் இந்திய ஜவுளி ஏற்றுமதிக்கு துணையாக சேலத்தில் 800 கோடி ரூபாயில் ஜவுளி பூங்காவும், விருதுநகரில் 1800 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது.
ஏற்றுமதி, வேலைவாய்ப்பு
இவ்விரு புதிய ஜவுளி பூங்காக்களும் மாநிலத்தின் ஜவுளி உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜவுளி துறைக்காக திருப்பூர்-ஐ மட்டுமே சார்ந்து இருக்கும் நிலையும் இதன் மூலம் மாறும், உற்பத்தியை குறுகிய காலத்தில் அதிகரிக்க முடியும்.
மெட்ரோ ரயில் திட்டங்கள்
மேலும் சென்னையை தாண்டி மாநிலத்தில் பல நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வரும் வேளையில் போக்குவரத்தை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகள் தேவைப்படுகிறது. பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் முக்கியமானதாக மாறியுள்ள வேளையில் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
கோவை மெட்ரோ ரயில் திட்டம்
அவிநாசி, சத்தியமங்கலம் சாலை உள்ளடக்கிய மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ. 9,000 கோடியில் கோவையில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட் அறிக்கையின் தாக்கலின் போது பிடிஆர் தெரிவித்தார்.
செம்மொழி பூங்கா
இதேபோல் கோவையில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா இதர வசதிகள் மேம்படுத்த 172 கோடியில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தகவல் தொழில்நுட்ப புரட்சி
தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூர் TNTECH CITY அமைக்கப்படும் என பட்ஜெட் அறிக்கையின் தாக்கலின் போது பிடிஆர் தெரிவித்தார். இதோடு ஈரோடு, செங்கல்பட்டு, நெல்லையில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications