ஒரு சமுதாயம் செழித்து தன்னிறைவுடன் திகழ வேண்டுமென்றால் அச்சமுதாயத்திலுள்ள பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாய் இருப்பது மிகவும் அவசியம். இதேபோல் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பது மூலம் வேகமாக வளர்ச்சி அடையவும் முடியும்.
அந்த வகையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்துவதாக பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாக்க தோல் அல்லாத காலனிகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஈர்பதில் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருவதாக இன்றைய பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 3,89,651 மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அரசு கையெழுத்திட்டு உள்ளது. இந்த 221 ஒப்பந்தம் மூலம் 2,70,020 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட உள்ளனர்.
வேலைவாய்ப்புகள்
தமிழக அரசு தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக ஸ்டாலின் தலைமையிான அரசு முனைப்பாக உள்ளது என பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெண்கள்
பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. இத்தொழிற்சாலைகள் ஏற்கனவே செய்யாறு, பர்கூர் ஆகிய இடங்களில் செயல்பாட்டில் உள்ளன.
தோல் அல்லாத காலணிகள்
இதற்கிடையில் திண்டிவனத்தில் 5,400 பெண்களுக்கும், பெரம்பலூரில்
31,600 பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் தரக்கூடிய
இரண்டு தொழிற்சாலைகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி
மேலும் இதே தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் துறையில் இரண்டு புதிய தொழிற்சாலைகள் ராணிப்பேட்டையிலும், கள்ளக்குறிச்சியிலும் அமைக்கப்படவுள்ளன. இவ்விரு தொழிற்சாலைகளில் 32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தனிக் கொள்கை
தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி துறையில் மேலும் முதலீடுகளை ஊக்குவிக்க இதற்கென தனிக்கொள்கை வெளியிட்டுள்ளதுடன், தைவான் காலணி உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் 'தமிழ்நாடு வழிகாட்டி' நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications