இந்தியாவின் ஒட்டுமொத்த டெக்ஸ்டைல் ஏற்றுமதி, வர்த்தகத்தில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் தமிழ்நாட்டின் ஜவுளி துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சேலம் மற்றும் விருதுநகரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 2வது முழு பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் இன்று தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் சேலம் மற்றும் விருதுநகரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக வெளியான அறிவிப்பு ஜவுளி துறையினருக்கு புதிய வாய்ப்பை உருவாக்கித்தரும்.
சேலம்
சமீபத்தில் தமிழ்நாட்டு முதல்வர் முக ஸ்டாலின் மேற்கு மண்டலத்தில் புதிய ஜவுளிப் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார்கள். இதை தொடர்ந்து இன்றைய பட்ஜெட் அறிக்கையில் சேலத்தில் சுமார் 880 கோடி ரூபாய் செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியுடனும், தனியார் தொழில் முனைவோர்களின் பங்களிப்புடனும் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விருதுநகர்
இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ 1800 கோடி ரூபாய் செலவில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் ஜவுளிப் பூங்கா அமைத்திட 1052 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்ததாகவும், ஒன்றிய அரசின் பங்களிப்புடன் இந்தப் பூங்காவின் பணிகள் விரைவில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் தொடங்கப்பட உள்ளதாக பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு பகுதி
விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் நிலத்தில் ஏறத்தாழ 1800 கோடி ரூபாய் செலவில் மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டம் மூலம் தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் புதிய வேலைவாய்ப்புகள், கட்டமைப்புகள், ஏற்றுமதிக்கு வழிவகுக்கும்.
கொங்கு மண்டலம்
சேலத்தில் 800 கோடி ரூபாயில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் திட்டம் மூலம் திருப்பூர்-ஐ மட்டுமே நம்பி ஜவுளி துறை இயங்கும் நிலை மாறும். இதன் மூலம் சேலத்தை சுற்றியுள்ள இளம்பிள்ளை, ஓமலூர், பவானி, கொமாரபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த வர்த்தகத்தை ஒருங்கிணைத்து மேம்படுத்த உதவும்.
2 லட்சம் வேலைவாய்ப்பு
இவ்விரு ஜவுளிப் பூங்காவின் மூலம் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் முக ஸ்டாலின் அரசின் 3வது பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10 சிறிய கைத்தறிப் பூங்கா
கைத்தறிப் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவும், சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் 20 கோடி ரூபாய் செலவில் 10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் அரசால் நிறுவப்படும்.
புதிய துணிநூல் கொள்கை
மேலும் கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் முழுமையான வளர்ச்சி, நவீன வடிவமைப்பு, துணிநூல் தயாரிப்பு இயந்திர உற்பத்தியை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் புதிய துணிநூல் கொள்கை ஒன்று வெளியிடப்படும்.
நெசவாளர்கள் நலன்
கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் நலனில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகின்றது. சுமார் 78,356 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 200 இல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல், 184 லட்சம் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 750 இல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications