சென்னை: இன்றைய தமிழ் நாடு பட்ஜெட் 2023ல் வெளியான அறிவிப்புகளில் பலரின் கவனத்தையும் ஈர்த்த அறிவிப்புகளில் ஒன்று, பத்திர பதிவு கட்டணம் குறைப்பு என்பது தான்.
குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் இந்த அறிவிப்பானது பெரும் வரவேற்பை பெற்றுள்ள திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இது புதியதாக வீடு வாங்கும் அல்லது வேறு ஏதேனும் சொத்து வாங்கும், நடுத்தர மக்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பில்டர்கள் தரப்பிலும் இது நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இது வீடு விற்பனை, மற்ற சொத்துகள் விற்பனையை ஊக்குவிக்கலாம்.
கொரோனாவின் வருகைக்கு பிறகு சற்றே மீளத் தொடங்கியிருந்த ரியல் எஸ்டேட் துறையில், சர்வதேச பொருளாதார மந்தம், விலைவாசி ஏற்றம் என பல காரணிகளும் தாக்கத்தினை ஏற்படுத்தின. இதனால் வீடு விற்பனை என்பது அதிகரித்தாலும், அது பெரியளவில் இல்லை. ஆனால் தற்போது ரியல் எஸ்டேட் துறையினருக்கு பெரும் ஆறுதலை கொடுக்கும் விதமாக தமிழக அரசின் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது என ரியல் எஸ்டேட் தரப்பினர் மத்தியில் கூறப்படுகிறது.
எவ்வளவு குறைப்பு?
வீடு உள்ளிட்ட சொத்து வாங்குவோரின் சுமையை குறைக்க பத்திர பதிவு கட்டணத்தை 4% ல் இருந்து 2% ஆக குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
நிலம் வாங்க திட்டமிடும் ஏழைகளின் சுமையை இது குறைக்க உதவும் எனலாம்.
அரசின் திட்டம் இது தான்
01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33% குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் 1%ல் இருந்து 4% ஆக உயர்த்தப்பட்டது. சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.
அரசின் முடிவுக்கு இது தான் காரணம்
இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும் வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. ஆக இந்த காலகட்டத்தில் நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4%ல் இருந்து 2% ஆக குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
வீடு வாங்குபவர்களுக்கு பயனளிக்கும்
இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5% முத்திரைத் தீர்வை, 2% சொத்து மாற்று வரி மற்றும் 2% பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7% ஆக முத்திரைத் தீர்வை, 2% பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications