சென்னை: தமிழக சட்ட சபையில் 2023 - 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் மார்ச் 20 அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டினை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார்.
பட்ஜெட்டில் வெளியாகுமா?
20223 - 24ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மாதம் 1000 ரூபாய் குறித்தான அறிவிப்பானது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு சட்ட சபை தேர்தல் குறித்தான பிரச்சாரத்தின் போது, இது குறித்தான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி குறைக்கப்படுமா?
ஆக இந்த மாதம் 1000 ரூபாய் திட்டம் குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் எரிபொருள் விலையினை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆக இது குறித்தான அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய தேவை
இன்று தமிழகத்தின் முக்கிய தேவையாக இருப்பது வேலை வாய்ப்புகள் தான். ஆக அன்னிய முதலீடுகளை அதிகரித்து, அதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்கவும் நடவடிக்கைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக, குறிப்பாக தொழில் குறித்தான திறனை மேம்படுத்தும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படலாம். இது மேற்கொண்டு வேலை வாய்ப்புகளையும், சுய வேலை வாய்ப்பினையும் அதிகரிக்க உதவலாம்.
விவசாயிகளின் கோரிக்கை
நீண்டகால விவசாய மக்களின் கோரிக்கையாக இருந்து வருவது நெல் கொள்முதல் நிலையங்களில், மழை, வெயில் காலங்களில் மழையில் நனைந்தும், வெயில் காய்ந்தும் வீணாவதையும் காண முடிகிறது. ஆக நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முக்கிய நீர் ஆதாரங்கள் தூர் வாரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை இருந்து வருகின்றது. ஆக இது குறித்தும் முக்கிய அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம்
அரசு ஊழியர்கள் தரப்பில் நீண்டகாலமாக பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக போராட்டங்கள் கூட இருந்து வரும் நிலையில், இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
தொழில் பூங்கா
இதுமட்டும் அல்ல, தமிழகத்தில் தொழில்துறையினை மேம்படுத்த பல இடங்களில் தொழில் பூங்காக்கள் குறித்தான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கலாம். இதன் மூலம் தமிழகத்தில் வேலை வாய்ப்பினை அதிகரிக்க முடியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications