மத்திய அரசின் இடைக்காலப் பட்ஜெட் அறிவிப்புகள் சாமானிய மக்களைப் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றாலும் முதலீட்டுச் சந்தைக்கு ஏதுவான மூலதன செலவினத்திற்கு 11 சதவீதம் உயர்த்தப்பட்டுச் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழ்நாடு அரசு அப்படியில்லை இந்த வருடத்திற்கான முழுபட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து சுமார் 33 மாதங்கள் மாதங்கள் முடிந்துள்ள நிலையில் புதிய இலக்குடன், புதிய திட்டங்கள் உடன் அடுத்த நிதியாண்டுக்குத் தமிழ்நாடு அரசும், மக்களும் பயணிக்க உள்ளனர்.

தமிழ்நாடு அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகச் சட்டசபையில் இன்று காலை 10 மணிக்குப் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்தப் பட்ஜெட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அறிவிப்பாக இருப்பது மாவட்டங்கள் பிரிப்பு குறித்த அறிவிப்புகள் தான். குடியரசு தினத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகும் எனப் பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஏற்கனவே வெளியான தகவல் படி கும்பகோணம், பொள்ளாச்சி, கோவில்பட்டி, பழனி, ஆரணி, விருத்தாசலம், கோபிசெட்டிபாளையம் ஆகிய 7 புதிய மாவட்டங்களைத் தனியாகப் பிரிக்கும் அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் வெளியாகலாம்.
இதேபோல் சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டத்தில், சில முக்கியப் பகுதிகளைப் பிரித்துப் புதிய மாவட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளது.
மாவட்டங்களைப் பிரிப்பது மூலம் இப்பகுதியில் வளர்ச்சி வாய்ப்புகள் புதிய முதலீட்டை ஈர்க்கும் வாய்ப்புகள், தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தும் முறை எனப் பல நன்மைகள் உள்ளது. தனியார் தொழிற்சாலைகள் முதல் உள்கட்டமைப்பு வரையில் பல நன்மைகள் உள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டமும் தனிப்பட்ட முறையில் வளர்ச்சி வாய்ப்புகளை நோக்கி வேகமாகப் பயணிக்க முடியும். புதிய மாவட்டங்களாகப் பிரிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் அறிக்கையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகச் சட்டசபையில் அறிவித்தார் எனில் பல மாவட்டங்களுக்கு இன்று தீபாவளி தான்.


Click it and Unblock the Notifications