இப்போது உலகமே செமி கண்டக்டர்கள் மூலமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. கார்கள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், மொபைல்கள் என நம்மை சுற்றியுள்ள எல்லா சாதனங்களும் செமி கண்டக்டர்கள் இல்லாமல் தயாரிக்க முடியாது. அப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த செமி கண்டக்டர் தயாரிப்புக்கு பெரிய அளவில் எதிர்காலம் உள்ளது. எந்த நாடு இப்போதே செமி கண்டக்டர் உற்பத்திக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்கிறதோ, எதிர்காலத்தில் அவை அசைக்க முடியாத உலக சக்தியாக மாறும். இதுதொடர்பான பணியில் மத்திய அரசும் தீவிரம் காட்டி வருகிறது.

இந்தநிலையில் இன்றைய தமிழ்நாடு மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, மின்னணுத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மின்னணு பொருட்கள் உற்பத்தி வளர்ச்சிக்காகவும் சென்னையில் ரூ.100 கோடியில் செமி கண்டக்டர் ஆய்வகம் அமைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், கோவை மாவட்டம் சூலூர் திருப்பூர் பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும்.
செமி கண்டக்டர் இயக்கம் தொடங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு. ரூ. 400 கோடியில் ஓசூரில் 5 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். தென் மாவட்டங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. மதுரை, கடலூரில் ரூ.250 கோடியில் புதிய காலணி தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரிவுப்படுத்தப்படும்.
ரூ.350 கோடியில் சென்னை கோவளத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். 9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்க ரூ.366 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய புனல்மின் நிலையங்கள் அமைக்க ரூ.11,721 கோடி ஒதுக்கீடு,கடல்சார் வள அறக்கட்டளைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அதேபோல், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ. 400 கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்படும். சென்னையில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர் பூங்காக்கள் ரூ. 85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். புதுக்கோட்டை, அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1920 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். சென்னையில் பெருநகரில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய ரூ.2423 கோடி மதிப்பீட்டில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் . நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ 26.678 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக இது அமையும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications