Tamilnadu Budget 2023: மின்சார பிரச்சனைக்கு என்ன தீர்வு..? தமிழ்நாடு அரசு திட்டம் என்ன..?

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்திட பசுமை ஆற்றல் வளங்களுக்கு அதாவது கிரீன் எனர்ஜி மூகம் ஈடு செய்யும் நோக்குடன் இப்பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் 33,000 மெகாவாட் அளவிற்கு தமிழ்நாட்டின் மின்சார உற்பத்தித் திறனை உயர்த்தி மாநிலத்தில் மொத்த மின் உற்பத்தி அளவீட்டை இரட்டிப்பாக்க அரசு முடிவு செய்துள்ளது என இன்று பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் தற்போது வெறும் 20.88 சதவீதமாக இருக்கும் கிரீன் எனர்ஜி பங்களிப்பை 2030 ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது தமிழ்நாடு அரசு.

கிரீன் எனர்ஜி

கிரீன் எனர்ஜி

தமிழ்நாட்டில் சூரிய ஆற்றல் திறன் 20 GW, நிலப்பரப்பில் காற்றாலைகள் திறன் 70 GW, கடல் பரப்பில் காற்றாலைகள் திறன் 30 GW என மிகுதியான பசுமை ஆற்றல் வளங்களையும் வாய்ப்புகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது.

பசுமை மாநிலம்

பசுமை மாநிலம்

2030‑ஆம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் அதாவது ரினியூவபிள் எனர்ஜி பங்களிப்பு இருக்கும் வகையில் பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு சிறப்பு நிறுவனம் ஒன்றை அரசு உருவாக்கும்.

புதிய கொள்கை

புதிய கொள்கை

மேலும், மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகளின் செயல்திறனை மறுசீரமைக்க புதிய கொள்கை ஒன்றும் வகுக்கப்படும்.

மாநிலத்தின் உச்சநேர மின் தேவையை நிறைவு செய்வதற்காக அரசு - தனியார் பங்களிப்புடன் (PPP) நீர் மின் திட்டங்கள் நிறுவப்படும்.

நீலகரி மாவட்டம்

நீலகரி மாவட்டம்

நீலகரி மாவட்டத்தில் குந்தா பகுதியில் கட்டப்பட்டு வரும்

500 மெகாவாட் திறன்கொண்ட hydro-electric திட்டம் 2024-25 ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டிற்கு வரும்.

மேலும், 2030ஆம் ஆண்டுக்குள், 77,000 கோடி ரூபாய் செலவில் 14,500 மெகாவாட் திறன்கொண்ட 15 புதிய நீர் மின் திட்டங்கள் அரசு - தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் நீர் மின் திட்டங்களில் முதலீடுகளை ஊக்குவிக்க ஒரு விரிவான கொள்கையை அரசு வகுக்கும்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் 4,100 மெகாவாட் அனல் மின் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

TNEB இழப்பு

TNEB இழப்பு

தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படைச் சீர்திருத்தங்களின் விளைவாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை சற்று மேம்பட்டுள்ளது. இதனால், இக்கழகத்தின் இழப்பு 2021-22 ஆம் ஆண்டில் 11,955 கோடி ரூபாயிலிருந்து நடப்பாண்டில் 7,825 கோடி ரூபாயாக் குறைய வாய்ப்புள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+