சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ் குறித்து தான் நாடு முழுவது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக சாம்பியன்ஷிப் வெற்றி பெற்றுள்ள குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உலகமே உற்று நோக்கிய சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் என்ற பட்டத்தை வென்றுள்ளார். இந்தியாவே அவருடைய வெற்றியை கொண்டாடுகிறது.

சமூகவலைதளங்கள் வாயிலாக இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. வியாழக்கிழமை அன்று குகேஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற உடனே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குகேஷுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பங்கேற்று வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த அனைத்து வீரர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி பரிசுகளை வழங்கினார் என குறிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த டி குகேஷ் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனினை வென்று சாதனை படைத்துள்ளார். மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகை சூடி சாதனை படைத்து இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த டி குகேஷை முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என அதில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்திலும் குகேஷின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்றுக் கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் , டி. குகேஷை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குகேஷ் சென்னை திரும்பிய உடன் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
Story Written by: Devika
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications