ஆட்டோமொபைல் முதல் இன்ஜினியரிங் கருவிகள் வரை.. ஐடி முதல் ஆடை வரை எனப் பல துறையில் ஏற்றுமதியில் முன்னோடியாக இகுக்கும் தமிழ்நாடு இன்று காலணி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியிலும் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் பயணத்தில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர் சிப்காட் பகுதியில் JR-One Kothari காலணி தொழிற்சாலையை இன்று முதல்வர் முக ஸ்டாலின் வீடியோ கான்ஃபிரென்ஸ் வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த விழாவில் அரசு அதிகாரிகள் முதல் JR-One Kothari நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டை, சீனா போல் காலணி தயாரிப்பிலும் ஏற்றுமதியிலும் முன்னோடியாக உயர்த்த வேண்டும் என்றும், அதிகப்படியான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர் சிப்காட் பகுதியில் காலணி தொழிற் பூங்கா அமைப்பதாக அறிவித்தது.
தமிழ்நாட்டை காலணிகள் ஏற்றுமதி ஹப் ஆக மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன், சென்னையில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிப்காட் பகுதியில் காலணி தொழிற் பூங்கா உருவாக்கிய நிலையில் இன்று திட்டமிட்டபடி JR-One Kothari காலணி தொழிற்சாலை திறக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர் சிப்காட் பகுதியில் உருவாக்கப்பட்ட காலணி தொழிற் பூங்காவில் முதல் காலணி நிறுவனமாக ஜேஆர் ஒன் ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை அமைத்து, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
ஃபீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் மற்றும் ஷூடவுன் ஃபுட்வேர் கோ ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் தான் இந்த ஜேஆர் ஒன் ஃபுட்வேர் நிறுவனம். இந்தத் தொழிற்சாலை மூலம் பெரம்பலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர் எனச் சுமார் 4,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கப்பட உள்ளது.

சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு உள்ள இந்த JR-One Kothari காலணி தொழிற்சாலை முதல்வர் முக ஸ்டாலின் வீடியோ கான்ஃபிரென்ஸ் வாயிலாகத் திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தத் தொழிற்சாலைக்கான அடிக்கல்-ஐ 2022 நவம்பர் 28 நாட்டியது குறிப்பிடத்தக்கது.

ஃபீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் சுமார் 1700 கோடி ரூபாய் முதலீட்டில் காலணிகளைத் தயாரிக்கும் தொழிற் பூங்கா-வை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இந்தத் தொழிற்சாலை வேலைவாய்ப்புகளில் அதிகளவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என ஆரம்பம் முதல் கூறப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications