தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்கிறது. முதல்வர் உடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் அவரது குழுவினரும் ஜூலை மாத கடைசி வாரத்தில் அமெரிக்காவுக்குப் புறப்பட உள்ளனர்.
கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் மெட்டா (பேஸ்புக்), ஆரக்கிள், இன்டெல், அடோப் போன்ற தமிழ்நாட்டில் இல்லாத முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டில் GCC அமைக்கவும், முதலீடு செய்யவும், இந்தியாவிலேயே திறன்மிக்க தமிழ்நாட்டு ஊழியர்கள் படையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அழைப்பு விடுக்க தமிழக முதல்வர் அமெரிக்கா செல்லலாம் என கூறப்படுகிறது.

கூகுள், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை ஹைதராபாத்தில் உள்ளன. ஆரக்கிள், இன்டெல், கூகுள், ஆப்பிள், அடோப் ஆகியவை பெங்களூரில் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் இதுபோன்ற டாப் நிறுவனங்கள் இதுவரையில் தனது அலுவலகத்தை அமைக்கவில்லை.
இந்த நிலையை மாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான குழு அமெரிக்கா செல்ல உள்ளது. இதேவேளையில் அமெரிக்காவின் முன்னணி டெக் சேவை நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் மெட்டா (பேஸ்புக்), ஆரக்கிள் போன்றவை சமீபத்தில் இந்தியாவில் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அமெரிக்காவில் இந்த பெரிய டெக் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பல முக்கிய தொழில்நுட்பம் கொண்ட உற்பத்தி நிறுவனங்களும் உள்ளது, இதேபோல் பாதுகாப்புத் துறை, ஸ்டார்ட்அப் என பல முன்னணி நிறுவனங்கள் உள்ளது. முதல்வரின் டாப் டக்கர் டீம் எதை டார்கெட் செய்யப்போகிறது என்பது இதுவரையில் வெளியிடப்படவில்லை.
2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் முதலீட்டாளர் மாநாடு தமிழ்நாட்டில் நடந்தது, இந்த மாநாட்டில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்து அடுத்தடுத்து நிறுவனங்கள் முதலீடுகளை அமைத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க பயணம் மிகவும் முக்கியமானதாக உள்ளது
அமெரிக்காவில் இது தேர்தல் ஆண்டு என்பதால் முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை மிகவும் எச்சரிக்கை உடன் செய்யும் காலக்கட்டம் இது. இதனால் தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான குழுவின் அமெரிக்க பயணம் தோல்வியில் முடியலாம் என கருத்துக்கள் நிலவினாலும்..
அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால், இந்த புதிய வாய்ப்பை தட்டித்தூக்க இந்த பயணம் பயன்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான குழு நம்பலாம்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது சனிக்கிழமை கொலை முயற்சி நடந்துள்ளது. இதனால் இது சரியான நேரமாக இருக்காது என்றும் கருத்து நிலவுகிறது. இதை அனைத்தையும் கருத்தில்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பயணத்தை மறுபரிசீலனை செய்யவும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications