நாடாளுமன்றத் தேர்தலுக்கான போட்டி கடுமையாகி வரும் வேளையில் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி! என்ற தலைப்பில் ஒரு பதிவைச் செய்திருந்தார்.
இந்த பதிவில் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.

சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள் என்று பதிவு செய்திருந்தார். இதுக்குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமர்ப்பித்த விபரங்களைப் பார்த்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்-ன் பொருள் புரிந்துகொள்ள முடியும்.
இந்தியாவில் உள்ள பொதுத் துறை மற்றும் ஐந்து முன்னணி தனியார் வங்கிகளில், 2018 ஆம் ஆண்டு முதல் வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காதது (Minimum Balance), கூடுதல் ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் ஆகியவற்றிற்காக ரூ.35,000 கோடிக்கும் அதிகமான தொகையைக் கட்டணங்களை வசூலித்துள்ளதாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்த பதிலில் தெரிவித்துள்ளது.
நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கராட் அவர்கள் சமர்ப்பித்த பதிலில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காததற்காக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.21,000 கோடி என்றும், கூடுதல் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்காக ரூ.8,000 கோடியும், எஸ்எம்எஸ் சேவைகளுக்காக ரூ.6,000 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதில் மத்திய அரசு ஆய்வுக்காகச் சேர்க்கப்பட்ட தனியார் வங்கிகள் பட்டியலில் ஆக்சிஸ் வங்கி, ஐடிபிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஷிந்த் வங்கி, ஐசிஐசி வங்கி ஆகியவை உள்ளது என நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கராட் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குறைந்தபட்ச இருப்புத் தொகை கட்டணம்: பொது மற்றும் தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டுள்ளன.
இந்த இருப்புத் தொகையைப் பராமரிக்கவில்லை என்றால், வங்கிகள் வாடிக்கையாளரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் உரிமை உள்ளது. இந்த கட்டணங்கள் நகரம், கிராமம் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும். குறைந்தபட்ச இருப்புத் தொகை கடைபிடிப்பது வங்கிகளுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்குகிறது என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு இது சுமையாக அமைகிறது. குறிப்பாக, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு இது கூடுதல் சுமையாகவே உள்ளது.
இந்த மினிமம் பேலென்ஸ் வங்கிக்கு வங்கி மாறுபடும், அப்படி வங்கி கணக்கில் குறைந்தது 3000 முதல் 10000 ரூபாய் வரையிலான தொகையை இருப்பு வைத்திருக்க வேண்டும். நகரங்களில் இருக்கும் வங்கி கணக்கில் 2000 முதல் 5000 ரூபாய் வரையிலும், கிராமங்களில் 500 முதல் 1000 ரூபாய் நிலுவையில் வைத்திருக்க வேண்டும்.
மினிமம் பேலென்ஸ் பராமரிக்காத கணக்கில் இருந்து 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையில் கணக்கிற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. இப்படி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் திரட்டிய தொகை தான் ரூ.21,000 கோடி.
ஏடிஎம் கட்டணங்கள்: பொதுவாக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. இந்த இலவச எண்ணிக்கையைத் தாண்டி பரிவர்த்தனை செய்யும்போது, வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த கட்டணங்கள் வாடிக்கையாளரின் வங்கி மற்றும் பரிவர்த்தனை செய்யப்படும் ஏடிஎம் இடம் சார்ந்து வேறுபடலாம்.
எஸ்எம்எஸ் கட்டணங்கள்: சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கணக்கு தொடர்பான பரிவர்த்தனை விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் அனுப்புகின்றன. இந்த சேவைக்கு சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.
வாடிக்கையாளர்களின் பாதிப்பு: வங்கிகளால் வசூலிக்கப்படும் இந்த கட்டணங்கள், குறிப்பாகக் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களைப் பாதிக்கின்றன.
முக ஸ்டாலின் பதிவு: மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி!
ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள்.
சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.
கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?
இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications