கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக கோயம்புத்தூர் இருக்கிறது. நவீன வளர்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் கோயம்புத்தூர் நகரத்தை மாற்றி அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது .இதற்காக மாஸ்டர் பிளான் 2041 வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒப்புதலின்படி 1287 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட ஒரு நகரமாக கோவை இருக்கிறது . தற்போது தொழில் ரீதியாக கோவை பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. வேலைவாய்ப்புகளும் இங்கே பெருகி வருகின்றன. இதனால் நாள்தோறும் இங்கே மக்கள் தொகை அதிகரிக்கிறது. 2041ஆம் ஆண்டு இங்கே மக்கள் பல லட்சங்களில் உயரும் என கணிக்கப்படுகிறது. எனவே இத்தனை மக்களுக்கும் தேவையான வசதிகளை கொண்ட நகரமாக கோவையை மாற்றிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக கோவைக்காக இரண்டாவது முழுமை திட்ட வரைவு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் கோயம்புத்தூர் நகரம் 2041 ஆம் ஆண்டு 1531 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நகரமாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான வரைவு இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொது மக்களின் கருத்துக்களும் பெறப்பட்டன.
இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மாஸ்டர் பிளான் 2041-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் . 2041ஆம் ஆண்டில் மதுக்கரை ,கருமத்தம்பட்டி ,கூடலூர், காரமடை ஆகிய நான்கு நகராட்சிகள், 21 பேரூராட்சிகள் 66 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய நகரமாக இருக்கும் வகையில் இந்த இரண்டாவது மாஸ்டர் பிளானை தயார் செய்துள்ளனர். மொத்தம் 1531.57 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த நகரம் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது, அந்த கனவுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய நீடித்த நிலை தன்மை கொண்ட வகையிலும் நகரம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த மாஸ்டர் பிளான் போடப்பட்டிருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மிக்க நகரமாக கோயம்புத்தூரை உருவாக்குவதற்கான ஒரு அடித்தளமாக இந்த மாஸ்டர் பிளான் பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூர் நகரத்தை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது , வீட்டு வசதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வது ,சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டமும் எப்படி எந்த காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்ற விவரங்கள் அதில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

சட்டமன்ற தேர்தல் 2026: இந்த 6 தொகுதி மக்கள் என்ன செய்ய போறாங்களோ? உங்க தொகுதியும் லிஸ்ட்ல உண்டா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications