தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 50,000 பேர் பல்வேறு பணிகளுக்கு மாநில அரசால் நியமிக்கப்படுவார்கள் என புதன்கிழமை தெரிவித்தார். இந்த அறிவிப்பு அரசு வேலையில் சேர வேண்டுமென பல தகுதி தேர்வுகளுக்கு பயிற்சி எடுத்து வரும் மாணவர்களுக்கு ஜாக்பாட் ஆக மாற உள்ளது.
தமிழ்நாட்டின் புதிய முதலீடுகள், வெளிநாட்டு நிறுவனங்கள் என தனியார் துறையில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான வேவைவாய்ப்புகள் உருவாகி வரும் வேளையில் தற்போது அரசு வேலைவாய்ப்புகளிலும் புதிய பூஸ்ட்அப் கிடைத்துள்ளது. அடுத்த 2 வருடத்தில் பல்வேறு அரசு தகுதி தேர்வுகள் இதற்காக நடைபெற உள்ளது.

மேலும் குரூப்-4 தகுதி தேர்வின் கீழ் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசிய முக ஸ்டாலின் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 50,000 பேர் பல்வேறு பணிகளுக்கு மாநில அரசால் நியமிக்கப்படுவார்கள் என்ற இன்ப அதிர்ச்சியை கொடுத்தோடு. அரசு பணியில் அமர்த்தப்பட்டவர்கள் மக்களிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதி திமுக தலைமையிலான அரது தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் 12,576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டு நிலையில், தற்போது 10,205 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் மேலும் 17,000 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு பெற உள்ளனர்.
இந்த நிலையில் தான் அடுத்த இரண்டு ஆண்டுகளில், சுமார் 50,000 பேர் பல்வேறு அரசு அமைப்புகளின் வேலை வாய்ப்புகளில் மாநில அரசால் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். இது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஜூனியர் அசிஸ்டென்ட், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர் போன்ற பல்வேறு பதவிகளுக்கு அரசுப் பணியின் குரூப்-4 பிரிவின் கீழ் 10,205 இளைஞர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குரூப்-4 தேர்வின் மூலம் பணியமர்த்தப்பட்ட 10,000த்திற்கும் அதிகமானோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் பணியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 12 பேருக்கு இந்த நிகழ்ச்சியில் நியமன ஆணைகளை முதலமைச்சர் நேரில் வழங்கினார்.
கடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் சுமார் 22 லட்சம் பேர் கலந்து கொண்டு 10,205 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அரசு திட்டங்களும், அதன் பலன்களும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எவ்விதமான பாகுபாடின்றி கிடைக்க வேண்டும், சமூக நீதியை இந்த அரசு கட்டாயம் பாதுகாக்கும்.
இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கினார். மேலும் முதல்வர் உடன் பிற முக்கிய அமைச்சர்களான ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
More From GoodReturns

தேர்தல் தேதி வந்தாச்சு.. விஜய் ஜனநாயகன் படம் திரைக்கு வருமா..? வந்தது புது சிக்கல்..?!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: எத்தனை வாக்குச்சாவடிகள்..? எத்தனை வாக்காளர்கள்..? முழு விவரம்

பாஜக அரசின் தவறான முடிவுகளே LPG சிலிண்டர் பற்றாக்குறைக்கு காரணம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி..!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications