சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் வரும் 24ஆம் தேதி முதல்வர் மருந்தகம் திறக்கப்பட இருக்கிறது. இதில் 33 மருந்தகங்கள் சென்னையில் அமைய இருக்கின்றன. இந்த தகவலை கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் வெளியிட்டார்.
தற்போது நாடு முழுவதும் பிரதமர் மக்கள் மருந்தகம் என்ற பெயரில் மருந்தகங்கள் செயல்படுகின்றன .இங்கே மற்ற தனியார் மருந்தகங்களுடன் ஒப்பிடும்போது மருந்து , மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதே மாடலை பின்பற்றி தமிழ்நாட்டிலும் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன.

குறைந்த விலையிலும் தரமானதாகவும் முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் வழங்கப்படும் என அரசு கூறுகிறது. வரும் 24ஆம் தேதி மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன.
சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டார் .
அப்போது பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் தமிழ்நாட்டில் 980 மருந்தகங்களுக்கு அனைத்து தகுதிகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு திறக்க தயாராக இருக்கின்றன என தெரிவித்தார் .மீதமுள்ள மருந்தகங்களிலும் பணிகள் விரைவில் முடியும் என குறிப்பிட்ட அவர் முதலமைச்சரின் நேரடி பார்வையில் இந்த மருந்தகங்கள் செயல்பட உள்ளன என தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன என அமைச்சர் கூறினார். சென்னையில் 33,மதுரையில் 52 ,கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படும் என்றும் தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார் .
தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோருக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்குகிறது. இதில் 50 சதவீத தொகையானது ரொக்கமாகவும் மீதமுள்ள 50 சதவீதம் மருந்துகள் வடிவத்திலும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூட்டுறவுத்துறை சார்பாக மாநிலம் முழுவதும் 335 இடங்களில் சோதனை ஓட்டமாக முதல்வர் மருந்தகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகளை கொள்முதல் செய்வது மற்றும் இதற்கான கட்டுப்பாட்டு அமைப்பாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கமே செயல்பட இருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த டிபார்ம் மற்றும் பி ஃபார்ம் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து மக்கள் மருந்தகத்தை திறக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications