சென்னை: தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறது. அரசு சேவைகளை மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே கொண்டு வரக்கூடிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று முடிக்க வேண்டிய வேலைகளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு நேரடியாக சென்று ஒரே நாளில் முடித்துக் கொள்ள முடியும்.
நலம் காக்கும் ஸ்டாலின் : லட்சக்கணக்கான மக்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை பயன்படுத்தி வரும் நிலையில் மக்களுக்கு மற்றொரு நற்செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு இலவசமாக முழு உடல் பரிசோதனை முகாம்களை தொடங்க இருக்கிறது. வரும் சனிக்கிழமை அன்று முதலமைச்சர் ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்.

ஆகஸ்ட் 2 முதல் தொடக்கம்: சென்னை மயிலாப்பூரில் ஒரு பள்ளியில் இருந்து இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையில் மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது.
முழு உடல் பரிசோதனை :பொதுவாகவே மக்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். நோய்கள் வரும் முன் காப்பதற்கும், தொடக்கநிலையிலேயே அறிந்து சிகிச்சை பெறுவதற்கும் முழு உடல் பரிசோதனைகள் மிக முக்கியம். இவ்வாறு முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. இந்த சூழலில் தான் தமிழ்நாடு அரசு இந்த புதிய திட்டத்தை கொண்டு வர இருக்கிறது.
இலவச முழு உடல் பரிசோதனை : நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் படி மக்கள் முழு உடல் பரிசோதனைகளை இலவசமாகவும் தங்கள் வீட்டிற்கு அருகிலேயேயும் பெற்று கொள்ள முடியும் . பொதுவாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றால் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் 15000 ரூபாய் வரை செலவிட வேண்டும் அரசு மருத்துவமனைகளில் 4,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் இவற்றை தவிர்த்துவிடுகின்றனர்.

அமைச்சர் தகவல்: அனைவரும் முழு உடல் பரிசோதனை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி முழு உடல் பரிசோதனை மக்களை தேடி வர இருக்கிறது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பொது மருத்துவம், எலும்பியல், மகளிர் மருத்துவம், இதயம், நரம்பியல், தோல், காது மூக்கு தொண்டை , நுரையீரல் உள்ளிட்ட அனைத்து வகையான சோதனைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என கூறியுள்ளார்.
சனிக்கிழமைகளில் முகாம்: தமிழ்நாடு முழுவதும் இருக்க கூடிய மக்கள் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. காலை 9 மணி தொடங்கி மாலை 4 மணி வரை இலவச முழு உடல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் அறிவிப்பு வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
1,256 முகாம்கள் :தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் பரிசோதிக்கப்பட்டு, அவர்களின் மாற்றுத்திறன் சதவீதம் குறித்த சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைவதற்கும் முகாமில் விண்ணப்பம் செய்யலாம்.சென்னையில் 15 இடங்களில் இந்த முகாம் நடைபெற இருக்கிறது.
More From GoodReturns

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?



Click it and Unblock the Notifications