ராணிப்பேட்டை: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைய இருக்கும் கார் உற்பத்தி ஆலைக்கு வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கார் உற்பத்தியில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டது.

இதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட்டில் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் இணைந்து 9000 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி ஆலையை அமைக்கின்றன. இதன் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சிப்காட் வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் ஆர் காந்தி உள்ளிட்டோர் சிப்காட் வளாகத்தில் இந்த ஆலை அமைய இருக்கும் பணப்பாக்கம் பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர். அப்போது ஆலை திறப்பு நிகழ்வுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டையில் சிப்காட் நிர்வாகம் சார்பாக 1213 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 1213 ஏக்கரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை 470 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கிறது. மீதமுள்ள நிலம் மற்ற நிறுவனங்கள் அமைப்பதற்காக சிப்காட்டுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் தங்களுடைய சொகுசு மாடல் கார்களை உற்பத்தி செய்ய இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆலையில் மின்சார வாகன உற்பத்தியும் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ராணிப்பேட்டை தொழிற்சாலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே ராணிப்பேட்டையில் உற்பத்தியாக கூடிய கார்கள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.இதன் காரணமாக வாகன உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை சிப்காட் மாறும் என அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி சிப்காட் பகுதியில் மிகப்பெரிய காலணி உற்பத்தி ஆலைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருக்கிறார். 400 கோடி ரூபாய் முதலீட்டில் அமைய இருக்கும் இந்த ஆலையால் சுமார் 20,000 வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications