மாசம் 15 லட்சம் வருமானம்.. 'மன்மத லீலை' சாக்லெட் விற்கும் தமிழ்நாட்டு ஜோடி..!!

போட்டி நிறைந்த பரபரப்பான வாழ்க்கை முறை, நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் உடலில் சூடு அதிதரித்தல், மன அழுத்தங்கள் போன்ற காரணங்களால் இன்றைக்கு தம்பதிகளிடையே பாலுணர்வு குறைந்து விட்டது.

இதனால் தாம்பத்தியத்தில் செயல்பாடுகள் குறைந்து விட்டன. இருப்பினும் பாலுறவில் ஆர்வம் குறையாமலும் அதேநேரத்தில் பாலுணர்வு குறைவால் தாம்பத்தியத்தில் திருப்தியின்மை அதிகரித்து வருகிறது.

 மாசம் 15 லட்சம் வருமானம்.. 'மன்மத லீலை' சாக்லெட் விற்கும் தமிழ்நாட்டு ஜோடி..!!

இந்த நிலையில் பல போலி டாக்டர்கள் போலி சிகிச்சைகளை நம்பி பாலுணர்வை அதிகரிப்பதற்காக ஆபத்தான சிகிச்சைகளுக்கு மக்கள் ஆளாகின்றனர்.

இந்த நிலையில் பாலுணர்வை இயற்கையாகத் தூண்டி மக்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடிய ஒரு தயாரிப்பை இளம் தம்பதியர் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த தொழில்முனைவோர் தம்பதி பிரவீண் குமார், சிந்து. 2023 ஆம் ஆண்டில் இருந்து பாலுணர்வைத் தூண்டும் சாக்லெட்களைத் தயாரித்து விற்று வருகின்றனர். இந்தத் தொழில் மூலம் அவர்கள் மாதத்துக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் லாபம் சம்பாதிக்கின்றனர்.

இந்தியாவில் பாலுணர்வு பற்றி விழிப்புணர்வு இப்போது மக்களிடையே அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்கள் ஷிலாஜித், அஸ்வகந்தா போன்ற மூலிகைகளால் ஆன மருந்துகளை ஆண்மை விருத்திக்காகப் பயன்படுத்துகின்றனர்.

 மாசம் 15 லட்சம் வருமானம்.. 'மன்மத லீலை' சாக்லெட் விற்கும் தமிழ்நாட்டு ஜோடி..!!

இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீண் குமார் மற்றும் அவரது மனைவி சிந்து புதிய தொழிலுக்கான யோசனையில் ஆழ்ந்திருந்தனர்.
அவர்களது ஆய்வில் டார்க் சாக்லெட்கள் பாலுணர்வைத் தூண்டும் தன்மையைப் பெற்றிருப்பதை அறிந்து கொண்டனர். இதில் உள்ள பெனில்தைலமைன், செரோட்டினின் ஆகிய வேதிப் பொருட்கள் மனிதர்கள் உடலில் பாலுணர்வைத் தூண்டுகின்றன.

இந்த ஆய்வு முடிவு பிரவீனுக்கு ஒரு தனித்துவமான வணிக யோசனையை உருவாக்க உதவியது. இதுக்குறித்து அவர் கூறுகையில், டார்க் சாக்லேட்டில் லிபிடோ தூண்டுதல் கூறுகள் இருப்பதால் அதை சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படுகிறது. இதனால் பாலுணர்வு குறைபாடுகளால் தவிக்கும் தம்பதிகளுக்காக இந்த சாக்லெட்களை உருவாக்க முடிவு செய்தேன்.

இதுபோன்ற அந்தரங்க உணர்வைத் தூண்டும் தயாரிப்புகளுக்கு சந்தையில் பற்றாகுறை இருக்கிறது. எனவே, எனது புதிய பிராண்டுக்கான முக்கிய மூலப்பொருளாக டார்க் சாக்லேட்டைத் தேர்ந்தெடுத்தேன் என்று பிரவீன் கூறினார்.

டிசம்பர் 2023 இன் பிற்பகுதியில், காதல் மற்றும் ஆர்வத்துடன், பாலினத்தை மேம்படுத்தும் சாக்லேட் பிராண்ட்டான The Cocolove தமிழ்நாட்டில் விற்பனைக்கு வந்தது.

தற்போது இந்த சாக்லெட்கள் விற்பனை சக்கைப்போடு போடுகிறது.
தயாரித்து சந்தைக்கு வந்தவுடனேயே ஸ்டாக்குகள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. தி கோகோலவ் வெப்சைட்டில் சென்று பார்த்தால் புரியும். பல சாக்லெட்கள் வகைகள் அவுட் ஆப் ஸ்டாக் என்று இருக்கும். காரணம் டிமாண்டு.

இப்படி சாக்லெட் தயாரிப்பில் இறங்கியது பற்றி சிந்துவிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ஒரு காலத்தில் இந்தியாவின் பரபரப்பான தெருக்களில் இருந்த ஏதோ ஒன்று காணாமல் போனதை நாங்கள் கவனித்தோம். இளம்தம்பதிகள் தங்கள் காதல் வாழ்க்கையை இனிமையாகக் கழித்த காலம் இப்போது இல்லை.

பாலுணர்வை அதிகரிக்க பல மருந்துகள் இருக்கின்றன. ஆனால் இயற்கையாக அன்பு கலந்த உணர்வைத் தரக்கூடிய பொருளை உருவாக்க நாங்கள் முடிவெடுத்தோம். அதுதான் இந்த டார்க் சாக்லெட். மன்மதனையும் பொறாமை கொள்ளச் செய்யும் என்றார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+