தமிழ்நாட்டின் முதலமச்சரின் மகன் மற்றும் தற்போதைய அமைச்சராகிய உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். 46 வயதான இவர், சினிமா நடிகர் முதல் அரசியல் வரை பல்வேறு பிரவேசங்களை எடுத்து வருகிறார். அதன்படி திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து மூன்றாவதாக பெரிய பொறுப்பில் அமரவுள்ளார். இதற்கிடையில், உதயநிதி ரூ.33 கோடிக்கு சொத்துக்கள் வைத்துள்ள நிலையில், அவர் நிலங்கள், கட்டிடங்கள் என ரியல் எஸ்டேட்டில் எவ்வளவு முதலீடு செய்துள்ளார்? அவற்றின் மதிப்பு என்ன? அவர் வைத்துள்ள கார் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
உதயநிதியின் சொத்துக்கள் விபரங்கள்
துணை முதலமைச்சராகியுள்ள உதயநிதி வைத்துள்ள விவசாய நிலங்களின் மதிப்பு ரூ.4.73 கோடியாகவும், காலி நிலத்தின் மதிப்பு ரூ.88 லட்சங்களாகவும் உள்ளது. அதேபோல் அவர் வைத்துள்ள குடியிருப்பு கட்டிடங்களின் மதிப்பு ரூ.92.6 லட்சங்களாகவும் உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.6.54 கோடி ஆகவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உதயநிதியின் விவசாய நிலங்கள்
உதயநிதி ஸ்டாலின் தன்னிடம் ரூ.6.54 கோடிக்கு அசையா சொத்துக்களை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில் அவரிடம் உள்ள விவசாய நிலங்கள் மட்டும் மொத்தம் 4.73 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த 2010-2012 விவசாய நிலங்களை வாங்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் 4 விவசாய நிலங்களை வைத்துள்ளார். அதில், 2010 ஆம் ஆண்டில் 2.01 ஏக்கர் நிலத்தை ரூ.53 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். அதே ஆண்டில் 0.55 ஏக்கரில் ரூ.14.7 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். அதைதொடர்ந்து 2012ல் 4.65 ஏக்கரில் ரூ.3.07 கோடிக்கு வாங்கியுள்ளார். இறுதியாக 2012 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட 3.26 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.96 லட்சமாக உள்ளது. அதேபோல், இவருக்கு சென்னை வேளச்சேரியில் 2400 சதுர அடி பரப்பளவில் ரூ.88,35,490 மதிப்பீட்டில் காலி இடம் உள்ளது.
உதயநிதியின் குடியிருப்பு கட்டிடங்கள்
மேலும், ரூ.92,68,937 அளவிற்கு 2 குடியிருப்பு கட்டிடம் வைத்துள்ளார். அதன்படி, சென்னை ராயப்பேட்டையில், 811 சதுர அடி பரப்பளவில் குடியுருப்பு கட்டிடம் இதன் மதிப்பு ரூ.55,02,344 ஆக உள்ளது. அதேபோல், பள்ளிக்கரணையில், 1407 சதுர அடி பரப்பளவில் குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.37,66,593 ஆகும். இவற்றின் மொத்த மதிப்பீடுகள் சுமார் ரூ.6,54,39,552 ஆகும்.
உதயநிதியின் கார்கள்
அதேபோல், இவர் ரேஞ்ச் ரோவர் காரை வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.1.77 கோடியாகும். இதற்கிடையில், கடந்த 2013ல் உதயநிதி ஸ்டாலின் சட்ட விரோதமாக ஹம்மர் காரை இறக்குமதி செய்ததாகவும், சுங்க வரி ஏய்ப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது ஹைதராபாத் தொழிலதிபரால் இறக்குமதி செய்யப்பட்டு செல்வாக்கு மிக்க நபர்களுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படும் பல சொகுசு வாகனங்களில் இந்த கார் ஒன்றாகும். அதன்படி, உதயநிதியின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் இருந்து குறைந்தது 33 சொகுசு வாகனங்களை சிபிஐ பறிமுதல் செய்து, தொழிலதிபருடன் கூட்டுச் சேர்ந்ததற்காக வருவாய் புலனாய்வு அதிகாரி இயக்குநரகம் மீது வழக்கு பதிவு செய்தது. பின்னர் சிபிஐ உதயநிதியிடம் ஹம்மரை திருப்பி கொடுத்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications