தமிழ்நாட்டு அரசியலில் இன்று ஒரு முக்கிய மாற்றம் ஏற்படுகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்ந்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திராவிட முன்னேற்ற கழகம், ஆட்சி அமைந்து 3 ஆண்டுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று அமைச்சரவையில் மாற்றம் செய்யவுள்ளது. அதன்படி, இலாக்காக்கள் மாற்றம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பதவியேற்பு, முன்னாள் அமைச்சர் பதவியேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.
திமுக முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் பேரன் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனுமாகிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 3.30 மணியளவில் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், அமைச்சர் உதயநிதியின் சொத்து மதிப்பு மற்றும் அவர் வைத்துள்ள கார்கள் உள்ளிட்டவைகளை குறித்து இந்த பதிவில் காணலாம்.

அமைச்சர் உதயநிதி
கடந்த 1977 ஆம் ஆண்டு நவம்பர் 27-ல் சென்னையில் பிறந்தார். டான் பாஸ்கோ பள்ளியில் படிப்பை முடித்த அவர், கடந்த 1997 ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் பிஎஸ்இ விசுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்தார். பின்னர் 2002 ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் வணக்கம் சென்னை மற்றும் காளி திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.
அதைதொடர்ந்து 2008 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இது பல்வேறு வெற்றிப்படங்களை இன்றளவும் தயாரித்து வருகிறது. பின்னர் 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகனாக ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் அறிமுகமானார். சில வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். இவர் அமைச்சராக பதவியேற்றபின் நடித்த கடைசி படம் மாமன்னன். இது 2023 ஆம் ஆண்டில் வெளியானது.
அதேபோல், நெஞ்சுக்கு நீதி, கழகதலைவன், கண்ணை நம்பாதே, இது கதிர்வேலன் காதல், மனிதன், கண்ணே கலைமாணே, பொதுவாக எம்மணசு தங்கம், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
உதயநிதி அரசியல் பயணம்
கடந்த 2019 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் 2019 லோக்சபா தேர்தலுக்காக திமுகவிற்காக பிரச்சாரம் செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்ந்த சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ ஆனார். பின்னர் கடந்த 2022 டிசம்பர் 14ல் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இன்று 29 செப்டம்பர் 2024 முதல் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்.
உதயநிதி சொத்து மதிப்பு
46 வயதான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.33 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அவர் பல்வேறு வங்கிகளில் 1.22 கோடி வைப்பு நிதியாக வைத்துள்ளார். பாண்டுகள், பங்குகள் 7.72 கோடியாகவும், இன்சூரன்ஸ் பாலிசிகள் ரூ.16 லட்சங்களுக்கு வைத்துள்ளார். அதேபோல் இவர் பெயரில் 11 கோடிக்கான கடன்களும் உள்ளது. மேலும் இவர் வைத்துள்ள தங்கத்தின் மதிப்பு 1600 கிராம் இதன் விலை ரூ.55 லட்சமாகும். இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.22.53 கோடிகளாகும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications