சட்டமன்ற தேர்தல்: வாக்காளர் அட்டை இல்லையா? கவலை வேண்டாம்!! இந்த 12 ஆவணங்கள்ல ஒன்னு இருந்தா போதும்!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

100% வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் இந்த முறையும் பல வசதிகளை கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் பல திருப்பங்களை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்-இன் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

சட்டமன்ற தேர்தல்: வாக்காளர் அட்டை இல்லையா? கவலை வேண்டாம்!! இந்த 12 ஆவணங்கள்ல ஒன்னு இருந்தா போதும்!!

மக்களில் இவர்களில் யாருக்கு பெரும்பான்மை தரபோகிறார்கள், யார் வாக்குகளை யார் பிரிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் இந்த தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கின்றனர். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது, பூத் சிலிப்பும் கைக்கு வந்துவிட்டது, ஆனால் வாக்காளர் அட்டை இல்லை என்பவர்கள் அதற்கு மாற்றாக 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்க முடியும்.

Also Read

வாக்குச்சாவடிக்கு செல்லும் போது பூத் சிலிப்புடன் வாக்காளர் அட்டையை காட்டலாம். அப்படி வாக்காளர் அடையாள அட்டை கையில் இல்லை என்பவர்கள் 12 மாற்று அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை காண்பித்து தேர்தலில் வாக்களிக்கலாம்.

எனவே வாக்களிக்க செல்லும் முன்பு மறக்காமல் இந்த 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள மாற்று அடையாள ஆவணங்கள் இவை தான்:

1.ஆதார் அட்டை

2.புகைப்படத்துடன் கூடிய வங்கி அஞ்சலக கணக்க புத்தகம்

3 . மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அடையாள அட்டை

4. தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு அட்டை அல்லது ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை

5. ஓட்டுநர் உரிமம்

6. பான் கார்டு

7. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் படி பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட திறன் அட்டை

8. பாஸ்போர்ட்

9 . புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

10 . மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

11. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை

12 . இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை

Recommended For You

இவற்றில் ஒன்றை உங்களின் புகைப்பட அடையாள ஆவணமாக காட்டி தேர்தலில் வாக்களிக்கலாம். வாக்காளர் அட்டை இல்லை என்பதற்காக தேர்தல் வாக்களிக்காமல் இருக்க கூடாது , இந்த 12இல் ஒன்றை காட்டி தேர்தலில் வாக்களித்து மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+