தமிழ்நாட்டின் அடுத்த பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு ஆதாரமாக விளங்கும் ஓசூரில் தமிழக அரசு தொடர்ந்து நிலங்களை கைப்பற்றி பெரிய நிறுவனங்களை தொழிற்சாலை அமைக்க ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தருவது மட்டும் அல்லாமல் ஒசூரின் முதுகெலும்பாக இருக்கும் MSME துறை வளர்ச்சிக்கு போதுமான கட்டமைப்பு வசதிகளை செய்துக்கொண்டு வருகிறது.
இதேவேளையில் உற்பத்தி, வர்த்ததம், கட்டமைப்பு, போக்குவரத்து என அனைத்தும் புதுமையை புகுத்த முயற்சி செய்து வரும் தமிழ்நாடு, முதல் முறையாக ஒசூரில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இத்திட்டத்தின் வெற்றி மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து சிப்காட், தொழிற்பூங்காவில் செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளது. அப்படி என்ன திட்டம்..?

தமிழ்நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்புக்கு புதிய இன்ஜினாக செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் சுசுவாடி தொழிற்பேட்டையில் 4 மாடி தொழிற்சாலை காம்பிளக்ஸ் கட்டப்பட உள்ளது. இந்த முக்கியமான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தொழிற்சாலைகள் தரைத்தளத்தில் இருக்கும், ஆனால் பல முன்னணி வர்த்தக நாடுகள் பல அடுக்கு மாடிகளில் தொழிற்சாலைகள் அமைத்து இயங்குகிறது. இப்படி முதல் முயற்சியாக ஓசூர் சுசுவாடி தொழிற்பேட்டையில் 4 மாட தொழிற்சாலை வளாகம் அமைக்கப்பட உள்ளது.

இந்த புதிய முயற்சிக்கான மொத்த செலவு 26.2 கோடி ரூபாய், கார்பரேட் அலுவலக கட்டிடங்களில் எப்படி plug-and-play வசதிகள் வழங்கப்படுகிறதோ, அதேபோல் இந்த பல அடுக்கு தொழிற்சாலையில் MSME நிறுவனங்களுக்கு plug-and-play சேவை வழங்கப்படுகிறது.
மேலும் இந்த புதிய தொழிற்சாலை வளாகத்தில் தண்ணீர் இணைப்பு, மின்சாரம், சரக்கு மற்றும் மக்கள் பயன்படுத்தும் லிஃப்ட், கனரக வாகனங்கள் நிறுத்தம், சிசிடிவி பாதுகாப்பு, தீ பாதுக்காப்பு என சகலமும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த 4 அடுக்கு தொழிற்சாலை வளாகத்தில் சுமார் 69 MSME நிறுவனங்கள் ஒரே நேரத்தில் இயங்க முடியும்.


Click it and Unblock the Notifications