இந்திய வாகன உற்பத்தியில், தமிழ்நாடு சிறந்து விளங்குவது மட்டும் அல்லாமல் வாகன ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. இந்த மேஜிக்-ஐ எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் எந்தக் காரணத்திற்காகவும் விட்டுவிடக் கூடாது என்று விடாப்பிடியாக எலக்ட்ரிக் வாகனம் சார்ந்த முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது தமிழ்நாடு அரசு.
இருசக்கர வாகன பிரிவில் ஓலா நிறுவனத்தில் துவங்கி, சீனாவின் BYD, அசோக் லைலேண்ட் நிறுவனத்தின் ஸ்விட்ச் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் அசத்தி வருகிறது.

இந்தியாவில் விற்கப்படும் 40 சதவீத 4 சக்கர வாகனங்களும், 70 சதவீத இரு சக்கர வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என DIIPC அமைப்பின் செயலாளர் வி அருண் குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் வாகன (EV) துறையில் சுமார் 50,000 கோடி ரூபாய் முதலீடுகளைத் தமிழ்நாடு பெறும், இதன் மூலம் மாநிலத்தில் சுமார் 150,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கும் என்று தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் எலக்டிரிக் வாகன உற்பத்தியில் முக்கியப் பங்கீட்டை வகிக்கும் நிறுவனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஏதர். இதேபோல் ராணிபேட்டையில் ஆம்பியர் வெஹிக்கல்ஸ், காஞ்சிபுரத்தில் BYD இந்தியா, திருவள்ளூர் மாவட்டத்தில் Stellantis, கோயம்புத்தூரில் E-Royce மோட்டார்ஸ்.
இந்தியாவில் சில மாநிலங்கள் மட்டுமே எதிர்காலத்திற்குத் தேவையான EV கொள்கைகளைக் கொண்டு உள்ளது, அதில் தமிழ்நாடு அரசு மிகவும் தெளிவான மற்றும் அனைவருக்குமான, நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் கொள்கையைக் கொண்டு உள்ளது. தமிழ்நாட்டில் EV கொள்கையில் Battery-as-a-Service என்ற புதிய முன்முயற்சி உள்ளது எனவும் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு அரசு பேட்டரி தயாரிப்பு உபகரணங்கள், கருவிகளை வாங்குவதற்கு மானியம் அளிப்பது மட்டும் அல்லாமல் பேட்டரி ஸ்வாபிங் ஸ்டேஷன்-க்கும் மானிய வழங்குவதாக அமைச்சர் டி ஆர் பி ராஜா கடந்த வாரம் நடந்த இந்தியா கான்கிளேவ் கூட்டத்தில் பேசினார்.
2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை எட்டுவதற்காகத் தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் பங்களிப்பில் EV துறை பிரிவு ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்.
தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் எலக்ட்ரிக் வாகன துறை துறையின் வளர்ச்சி முக்கியக் கவனத்தைப் பெறும். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 தேதி உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டு நடக்க உள்ளது இதில் சர்வதேச EV நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications