தமிழ்நாட்டின் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2024 அடுத்த வாரம் 7 மற்றும் 8 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தமிழ்நாட்டின் தொழில்துறை ஜாம்பவான்களைக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு புதிய பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நிறுவனங்களைப் பெருமைப்படுத்தும் விதமாகப் பல நிறுவனம் குறித்துப் பிரத்தியேகமான வீடியோவை தமிழ்நாட்டுத் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து டிஆர்பி ராஜா அவர்களின் டிவிட்டர் பதிவில் தமிழ்நாட்டுத் தொழிற்துறை அமைச்சகம் முதல்வர் முக.ஸ்டாலின் வழிகாட்டுதல் கீழ் நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்ற நமது மாநில தொழில்முனைவோரைப் பாராட்டும் வகையில் #TitansOfTamilNadu என்ற சிறப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதில் தமிழ்நாட்டுத் தொழிற்துறை அமைச்சகம் வெளியிடும் முதல் வீடியோ வேறு யாரும் இல்லை, டிவிஎஸ் வேணு சீனிவாசன் பற்றியது தான் என டிஆர்பி ராஜா அவர்கள் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் எமரிட்டஸ் தலைவர் திரு. வேணு சீனிவாசன் தனது இளமை காலத்தில் இருந்து ஆட்டோமொபைல் துறையுடன் ஒன்றிப் பயணித்தது மூலம் வாகன துறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டார்.
டிவிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா, உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் MRF. தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் MRF நிறுவனத்தின் மாபெரும் வளர்ச்சிக்கும், மாபெரும் வெற்றிக்கும் காரணமானவர், திரு.மாமென் அவர்கள். இது இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற டயர் உற்பத்தியாளர் என்ற இடத்தை மட்டும் அல்லாமல் ராணுவ வாகனங்களுக்கான டயர்களை உருவாக்கிய பெருமை கொண்டது. மேலும் MRF-ன் திருச்சி தொழிற்சாலை தான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது.
தமிழ்நாட்டின் மருத்துவச் சேவையில் முன்னோடியாக இருப்பது, மட்டும் அல்லாமல் மருத்து சிகிச்சையிலும் சர்வதேச அளவில் முன்னோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் ஹெல்த்கேர் துறையில் முக்கிய இடத்தைக் கொண்டு இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் 150 நாடுகளில் இருக்கும் மக்களுக்குத் தமிழ்நாட்டில் சிகிச்சை அளித்து வருகிறது.


Click it and Unblock the Notifications