தமிழகத்தின் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி தொடங்கும் பொங்கல் பண்டிகை ஆனது பல்வேறு தரப்பினரும் வரவேற்று கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகை ஆனது போகி பண்டிகையில் தொடங்கி, தைபொங்கல், மாட்டுபொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்களுக்கு வெகுவிமரிசையாக கொண்டாட உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக அரசு தமிழக மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன்படி பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக அண்மையில், அறிவித்தது. இந்த நிலையில், தற்போது அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, 2023-2024-ஆம் ஆண்டுக்கான சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில், அனைத்து சி மற்றும் டி குரூப் ஊழியர்களுக்கும் ரூ.3,000 உச்சவரம்புக்கு உட்பட்ட தற்காலிக போனஸ் வழங்கப்படும். அதேபோல், கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்த முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்களைத் தவிர, ஒருங்கிணைந்த ஊதியம் மற்றும் சிறப்பு ஊதிய விகிதத்தில் உள்ள ஊழியர்களுக்கு ரூ.1,000 சிறப்பு தற்காலிக போனஸ் வழங்கப்படும்.
அதேபோல், சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நாட்டுக்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடித் தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications