தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நாமக்கல் மாவட்டம், இப்போது தகவல் தொழில்நுட்ப துறையிலும் முக்கிய மையமாக மாற உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய டைடல் பார்க் நிறுவப்படுகிறது.
இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா (IT Park), நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரித்து, இளம் தலைமுறைக்கு புதிய தொழில்நுட்ப வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பிற நகரங்களைப் போலவே, நாமக்கல்லிலும் டிஜிட்டல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இந்த டைடல் பார்க் இருக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு, முதல்வர் மு.ஸ்டாலின் சேலம் மாவட்டம் கருப்பூரில் நியோ டைடல் பார்க்கை திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது சேலம் - நாமக்கல் மாவட்டங்களுக்கு மத்தியில் உள்ள ராசிபுரத்தில் அடுத்த டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ரூ.35 கோடி மதிப்பீட்டில் அமைய இருக்கும் இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா, மாநிலத்தின் மத்திய பகுதியிலும் ஐடி வளர்ச்சியை விரிவுபடுத்தும் முக்கிய திட்டமாக கருதப்படுகிறது.
இதன் மூலம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளன. நாமக்கல் மாவட்ட இளைஞர்களுக்கு தொழில்நுட்ப துறையில் பயிற்சி மற்றும் பணிவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வியில் முன்னேற்றம் பெற்று வரும் நாமக்கல் மாவட்டம், பல உயர்தர கல்வி நிறுவனங்களை கொண்டுள்ளதால், தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வளர்ச்சியை தொடர்ந்து வலுப்படுத்தும் நோக்கில் தான், ராசிபுரத்தில் டைடல் பார்க் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், மாவட்ட இளைஞர்களுக்கு சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், தொழில்நுட்ப முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாகவும், இந்த டைடல் பார்க் செயல்படும். இதன் மூலம், நாமக்கல் மாவட்டம் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேலும் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோழிப் பண்ணைகள், தீவன மற்றும் முட்டை உற்பத்தி, ரிக் தயாரிப்பு, லாரி பாடி பில்டிங், சரக்கு வாகன போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் ஏற்கனவே சிறப்பாக முன்னேறி வரும் நாமக்கல் மாவட்டம், தற்போது ஐடி துறையிலும் தனது நிலையைக் கட்டியெழுப்ப உள்ளது. ராசிபுரத்தில் அமைக்கப்படும் டைடல் பார்க், இம்மாவட்டத்தின் வழக்கமான தொழில்துறைகளுக்கு தேவையான டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கும் மையமாக உருவாக்கப்படுகிறது.
இந்த சூழலில் தான், ராசிபுரத்தில் புதிய டைடல் நியோ பூங்கா (TIDEL Neo Park) அமைப்பதற்கான கட்டிடத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. G+3 (தரை + 3 மாடி) அமைப்பில் உருவாக உள்ள இந்த தொழில்நுட்ப வளாகம், இளைய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான இட வசதி, உள்கட்டமைப்பு, மற்றும் ஊக்குவிப்புகளை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட உள்ளது. டெண்டர் விவரங்கள் மற்றும் பயனாளிகளுக்கான தகவல்கள் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications