சென்னை: ரேஷன் கார்டு இல்லாதவர்களும் ரேஷன் கடைகளில் கொடுக்கும் பொருட்களை பெற முடியும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சாமானிய மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை மாத மாதம் ரேஷன் கடைகளில் பெற்று வருகின்றனர். ரேஷன் கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் குறைந்த விலையிலும் அல்லது இலவசமாகவோ அரசு வழங்கி வருகிறது. மேலும் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை சுமார் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உதவும் பொருட்டு, குடும்ப அட்டைதாரகளுக்கு நலத்திட்ட உதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அப்பொழுது அனைவரும் பயன்படுத்தும் குடும்ப அட்டைகளில் நலத்திட்ட உதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், இதுவரை 27,577 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைனில் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தவர்களில் 45,509 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட இருக்கிறது. இதனை அவர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களின் மொபைல் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பி உள்ளது. இதனை அந்த குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் சென்று பெற்றுக் கொள்ளலாம். புதிய குடும்ப அட்டைகள் பெற விண்ணப்பித்தவர்களில் பலருக்கு இன்னும் குடும்ப அட்டைகள் போய் சேரவில்லை. ஆனாலும் நியாய விலை கடைகளில் அவர்களுக்கு தேவையான பொருட்களான அரிசி மற்றும் மற்ற சாமான்களை அவர்கள் பெற முடியும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் கூறியுள்ளார்.
மேலும் ரேஷன் கடைகளில் முறைகேடாக நடக்கும் சில பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டு அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அங்குள்ள பொருட்களை மற்றவர்களுக்கு பணத்திற்காக விற்கின்றனர் என்ற புகார் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், அதனை தடுக்கும் விதமாக டிஎன்இபிடிஎஸ் என்ற ஆப்பை அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் குடும்ப அட்டைதாரர்கள் சிலர் மாத மாதம் தங்களுக்கு நியாய விலை கடைகளில் இருந்து கிடைக்கும் பொருட்களை பெறாமல் இருந்து விடுகின்றனர். இதன் காரணமாக அந்த பொருட்கள் ரேஷன் கடைகளிலேயே தங்கி விடுகிறது. இதனை அங்குள்ள பணிபுரியும் ஊழியர்கள் எடுத்து மற்றவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். அதனை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் இந்த டிஎன்இபிடிஎஸ் ஆப். இந்த ஆப்பை பயன்படுத்தி உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் அந்தந்த நியாய விலை கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications