கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பின்னர் தற்போது தான் மக்கள் மீண்டும் திரையரங்குகளை நோக்கி படை எடுக்கின்றனர். எனவே தமிழ்நாட்டில் சிறிய பட்ஜெட்டில் தொடங்கி பெரிய பட்ஜெட் வரையிலான படங்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கின்றன.
ஏற்கனவே சினிமா டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் விதிக்கப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக கேளிக்கை வரியை விதிக்கிறது. 8 சதவீதம் கேளிக்கை வரி என்பது சிறிய பட்ஜெட் கொண்ட படங்களுக்கு மக்களை கொண்டு வருவதில் சிக்கலை ஏற்படுத்துவதாக தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் கூறி வந்தனர்.

இந்த சூழலில் தான் தமிழக அரசு திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூல் செய்யும் கேளிக்கை வரியினை (Local Body Entertainment Tax (LBET)) 8இல் இருந்து 4 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வந்திருப்பதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழ் திரை துறையினர் நீண்ட காலமாகவே மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் திரைப்படங்களுக்கு விதிக்க கூடிய கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அண்மையில் கூட நடிகர் கமலஹாசன் FICCI கூட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்த கோரிக்கையை முன்வைத்தார். இந்த சூழலில் தான் தமிழ்நாடு அரசு கேளிக்கை வரியை 8இல் இருந்து 4 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கக்கூடிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தமிழ் சினிமா துறையில் திரைப்படங்களின் வெற்றிகள் 8 சதவீதமாக குறைந்து ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது, இத்தகைய காலகட்டத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஏற்கனவே 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது, அதே வேளையில் கேளிக்கை வரி என்ற பெயரில் மாநில அரசும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக 8% கேளிக்கை வரியை வசூல் செய்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரியை நீக்க வேண்டும் என பல ஆண்டுகளாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்து வந்தோம் தற்போது தமிழ்நாடு அரசு திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 4 சதவீதமாக குறைத்து அரசாணை வெளியிட்டு இருக்கிறது இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேளிக்கை வரியை குறைத்திருப்பதால் சினிமா டிக்கெட் கட்டணம் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் தான் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications