சென்னை: உலகம் முழுவதுமே பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனையாக புற்றுநோய் இருக்கிறது. புற்றுநோயை பொருத்தவரை ஆரம்ப கட்டத்திலேயே கவனிக்க தவறுவதால் தான் உயிரிழப்பு வரை கொண்டு சென்று விட்டு விடுகிறது. இதனால் தான் மருத்துவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என கூறுகின்றனர்.
புற்றுநோய் சோதனை: குறிப்பாக குடும்பத்தில் ஏற்கனவே யாருக்காவது புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது என்றால் அவர்களின் பிள்ளைகள் ஆண்டுக்கு ஒரு முறை புற்றுநோய் சோதனைகளை செய்து கொள்வது அவசியம் ஆகும். ஆனால் இத்தகைய புற்றுநோய் சோதனைகள் அதிக விலை கொண்டவை என்பதால் பலரும் அவற்றை எடுக்க முன் வருவதில்லை. இந்நிலையில் தான் அனைவரும் பயன்படுத்த கூடிய வகையில் மலிவு விலையில் தமிழ்நாடு அரசு புற்றுநோய் சோதனை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

முழு உடல் பரிசோதனை திட்டம்: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பாக முழு உடல் பரிசோதனை திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன . கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் பிளாட்டினம் பிளஸ் என நான்கு வகை முழு உடல் பரிசோதனை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன .
4 வகையான திட்டம்: கோல்டு திட்டத்திற்கு 1000 ரூபாயும் டைமன்ட் திட்டத்திற்கு 2000 ரூபாயும் பிளாட்டினம் திட்டத்திற்கு 3,000 ரூபாயும் பிளாட்டினம் பிளஸ் திட்டத்திற்கு 4,000 ரூபாயும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இதில் ரத்த சர்க்கரை, சிறுநீர் ஆய்வு, கல்லீரல் செயல்பாடு, கிட்னி செயல்பாடு, தைராய்டு , ஈசிஜி, டிரெட்மில் சோதனை என்பன உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தோடு தற்போது புதிதாக தமிழ்நாடு அரசு டைட்டானியம் என்ற ஒரு புதிய மருத்துவ பரிசோதனை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

டைட்டானியம் திட்டம் : டைட்டானியம் திட்டம் மூலம் பல்வேறு வகையான புற்று நோய்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். சில வகை புற்றுநோய்களின் அறிகுறிகள் நமக்கு தென்படுவதற்கு முன்னரே அதன் ஆரம்ப நிலையிலேயே இந்த மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்து விட முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 2,500 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் போதும் 10க்கு மேற்பட்ட புற்று நோய்களை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்துவிட முடியும்.
ரூ.2,500 கட்டணம்: இதே மருத்துவ பரிசோதனையை நாம் தனியார் ஆய்வகங்களில் எடுத்தால் 20,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய் வரை செலவிட வேண்டும், அதில் 10 சதவீத தொகையான 2500 ரூபாயை செலுத்தினாலே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும் சோதனையை பெற்றுக் கொள்ளலாம். கணையம், கல்லீரல், மார்பகம் , கருப்பை, கருப்பை வாய் புற்றுநோய் , தொண்டை புற்றுநோய் என 10க்கும் அதிகமான புற்றுநோய்களை இந்த சோதனை மூலம் கண்டறிய முடியும். PSA, CA 125, CA 19.9, AFP ஆகியவை இந்த சோதனை இடம்பெற்றுள்ளது என கூறும் மருத்துவர்கள் சோதனை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனையும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications