தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ரேஷன் பொருட்கள் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று சேரக்கூடிய வகையில் தாயுமானவர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதன்படி தமிழ்நாட்டில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைகளுக்கு அவர்களது வீட்டிற்க்கே மாதம் தோறும் சென்று ரேஷன் பொருட்கள் நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்றன . இவ்வாறு தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும்போது முன்கூட்டியே அந்த முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விடும் .

இதனை அடுத்து வீட்டுக்கே நேரடியாக சென்று அவர்களுக்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு விடும். தமிழ்நாட்டில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 20, 42, 657 முதியவர்களும் 1,27 ,797 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தமாக 21 , 70, 454 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.இவ்வாறு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும்போது குறிப்பிட்ட அந்த ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருக்கக் கூடிய குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்க்கப்பட்டு அதன் பின்னர் தான் ரேஷன் பொருட்கள் என்பது விநியோகம் செய்யப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு இரண்டு நாட்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வண்டிகளில் ரேஷன் பொருட்களை கொண்டு சென்று நேரடியாகவே இவர்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். இது மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது. ஏனெனில் இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் அதற்காக மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டும் அல்லது ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தான் ரேஷன் கடைக்கு செலவு செய்து சென்று பொருட்களை வாங்க வேண்டிய நிலையில் இருந்தனர். ஆனால் இனி அந்த பிரச்சனை அவர்களுக்கு இல்லை.
வீடு தேடி ரேஷன் பொருட்கள் வருவது முதியோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பெரிய உதவியாக இருக்கிறது. ஆனால் இவ்வாறு ரேஷன் பொருட்களைக் கொண்டு வரும்போது அந்த சேல்ஸ் இயந்திரத்தில் சில சமயங்களில் நெட்வொர்க் பிரச்சனை மற்றும் சர்வர் பழுதாவது , செயல்படாமல் போவது உள்ளிட்டவை காரணமாக குறிப்பிட்ட அந்த குடும்பத் தலைவரின் கைவிரல் ரேகை, கண் கருவிழி ஆகியவற்றை சரி பார்ப்பதில் சிரமம் ஏற்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ச்சியாக புகாட் தெரிவித்து வந்தனர்.
இந்த சூழலில் தான் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் பெறக்கூடிய முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கைரேகை, கண்கருவிழி ஆகியவை பதிவாகவில்லை என்றால் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. உணவுப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் சிவராசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் .
எனவே தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வழங்கும்போது சர்வர் வேலை செய்யவில்லை என்பன போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் ரேஷன் கடை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட முதியோர் அல்லது மாற்றுத் திறனாளியிடம் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டு ரேஷன் பொருட்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications