இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பல விஷயங்களில் முன்னோடியாக உள்ளது. சத்துணவு திட்டத்தில் துவங்கி ஐடி, மருத்துவ காப்பீடு, MSME நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு என பல விஷயத்தில் மாஸ்காட்டியுள்ளது. இந்த நிலையில் மற்றொரு விஷயத்திலும் தமிழ்நாடு மாஸ் காட்டியுள்ளது.
இந்திய பேஷன் மற்றும் ஆடம்பர நகை தயாரிப்பிலும் விற்பனையிலும் முன்னணி நிறுவனமாகவும், டாடா குழுமத்திற்கு அதிகப்படியான லாபத்தை அளிக்கக் கூடிய நிறுவனமாகவும் இருப்பது டைட்டன் நிறுவனம். இந்த நிறுவனத்தை டாடா குழுமம் நிர்வாகம் செய்து வந்தாலும், டாடா குழுமத்தை விடவும் அதிகமான பங்குகளை இந்நிறுவனத்தில் வைத்திருப்பது தமிழ்நாடு அரசு.

இது பலருக்கும் தெரியாது, டைட்டன் குழுமத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருந்தாலும் நிறுவனத்தின் இயங்கத்தில் தமிழ்நாடு அரசின் பங்கீடு எதுவும் இல்லை, நிர்வாக குழுவில் மட்டும் அரசு சார்பாக உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் டாடா குழுமத்தில் தமிழ்நாடு அரசு வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 71900 கோடி ரூபாய் என டிஎன்ஜியோகிராபி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில், மாநில அரசு ஒரு தனியார் நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகளின் அதிகப்படியான மதிப்புடையது இதுதான்.
டைட்டன் நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு 27.88 சதவீத பங்குகளையும், டாடா 25.02 சதவீத பங்குகளையும், பொது சந்தையில் 47.10 சதவீத பங்குகளும் உள்ளது. இந்த பங்கு இருப்பின் மூலம் தமிழ்நாடு அரசு டைட்டன் நிறுவனம் வெளியிடும் ஈவுத்தொகையை வரி அல்லாத வருமான பிரிவில் பெரும்.
சரி, தமிழ்நாடு அரசு எப்படி டைட்டன் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது..?!

டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டைட்டன் நிறுவனம் TIDCO உடன் கூட்டணியில் 1984ஆம் ஆண்டுக் Quartz வாட்ச் தயாரிக்க ஓசூரில் தொழிற்சாலை அமைத்தது. இன்று வரையில் டைட்டன் நிறுவனத்தின் பெரும்பாலான உற்பத்தி பணிகளை ஓசூரில் நடக்கிறது. டைட்டன் நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ளது.
இந்த கூட்டணி வாயிலாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (TIDCO) டைட்டன் நிறுவனத்தில் மட்டும் சுமார் 24,74,76,720 பங்குகளை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications