பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. தமிழர்களின் பாரம்பரியமான இந்த பொங்கல் திருவிழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் மக்கள் தயார் நிலையில் உள்ளனர். அதேவேளையில், தமிழ்நாடு அரசும் தயார் நிலையில் உள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதில், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவை வழங்கப்படும். இதுதவிர இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025ஐ வழங்கும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

இதற்கிடையில், தற்போது புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பதவர்களுக்கும் மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு பொங்கல் பண்டிக்கைக்கு முன் விரைந்து கிடைத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. என அவர்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்கும்.
இதற்கிடையில், பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். இதனை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களும் ரேஷன் கடைகளில் வாங்கி கொள்ளலாம். இந்த நிலையில், அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு தடையின்றி வழங்குவது குறித்தும், பொது விநியோக அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் குறித்தும் தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் வழங்கப்படும் பச்சரிசி மற்றும் சர்க்கரையின் தரத்தினை உறுதி செய்யவும், கரும்பின் நுனியிலிருக்கும் தோகையினை வெட்டாமல் முழுக்கரும்பு வழங்குவது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கிட கூட்டுறவுத் துறையினருடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், ரேஷன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து மாநிலம் முழுவதும் கண்காணித்து, உடனுக்குடன் குறித்த காலத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அனைத்துப் பொருட்களும் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு உடனுக்குடன் பரிசீலனை செய்து அவர்களில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் குடும்பங்களுக்கு, புதிய ரேஷன் கார்டுகள் விரைவாக வழங்கவும், ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கைக்கேற்ப தேவைப்படும் இடங்களில் புதியதாக ரேஷன் கடைகளை திறந்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவாக கிடைத்திட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது. அத்துடன் தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு ஒட்டுமொத்த மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications